![actor and tn anchor varatharaja video viral police](http://image.nakkheeran.in/cdn/farfuture/et567SqLFPLmrUOPob_AMWt520H0ngO0L0tdnmbinAE/1591668815/sites/default/files/inline-images/varatha%207896.jpg)
தவறான தகவலை வெளியிட்டதாக வரதராஜன் மீது பொது சுகாதாரத்துறை இயக்குநர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நாடக நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் மீது தொற்றுநோய்த் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வரதராஜனிடம் விசாரணை நடத்துவதற்காக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு என வரதராஜன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது, தவறான தகவலை வெளியிட்ட வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.