திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதன்மூலம், கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சி.பி.எம். கட்சி தன் அதிகாரத்தை இழந்தது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலம் முழுவதும் உள்ள சி.பி.எம். அலுவலகங்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திரிபுரா மாநிலம் பெலோனியா பகுதியில் உள்ள கல்லூரி சதுக்கப் பகுதியில் சி.பி.எம். ஆட்சியில் வைக்கப்பட்ட ரஷ்யப் புரட்சியாளர் விளாதிமிர் லெனினின் சிலையை பாஜகவினர் இடித்துத் தள்ளினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தன் முகநூல் பதிவில்,
திரிபுராவில் லெனினின் சிலையை பாஜகவினர் இடித்துத் தள்ளும் வீடியோ கட்சிகளை பதிவு செய்து அதனுடன்,
லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில். இன்று திரிபூராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை என்று தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்து தமிழக மக்களிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.