கரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்தால் தான் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க முடியும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். இந்த மூன்று மாவட்டங்களிலும் ரயில், பேருந்து போன்ற எந்த பொது போக்குவரத்து சேவைகளும் நடைபெறாது மார்ச் 31ம் தேதி வரை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.