பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. எம்பிக்கள் சிவப்பு, பச்சை, வெள்ளை, மஞ்சள் நிற பொத்தான்களின் ஒன்றை அழுத்த வேண்டும் என்று இருந்தது. இதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 451 பேர் பங்கேற்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வி அடைந்தது. பாஜக வெற்றி பெற்றது. தீர்மானத்திற்கு எதிராக 325 பேர் வாக்களித்துள்ளனர். தீர்மானத்தை ஆதரித்து 126 பேர் வாக்களித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் யாரும் நடுநிலை வகிக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அதிமுக உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பொதுவாக பாஜக அரசுக்கு ஆதரவாக 3ல் 2 பங்குக்கும் அதிகமான உறுப்பினர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு ஆதரவாக 325 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்துள்ளனர்.