மே 17-க்குப் பிறகாவது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா? என்பதில் மக்கள் கவலையடைந்திருக்கும் சூழலில், ஆட்சியாளர்கள் பலரும் ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்ல திட்டமிடுகிறார்கள்.
குறிப்பாக, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும், ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் முதல் கட்டமாக, ஆன்மிக நகரங்களை நோக்கி பயணிக்கத் திட்டமிடுகிறார்கள்.
இது குறித்து மத்திய அமைச்சர்கள் பலரும் எந்த நகரங்களுக்குச் செல்வது என விவாதித்துக் கொள்கிறார்களாம். குறிப்பாக, வாரணாசிக்குச் செல்ல பிரதமர் மோடி விரும்புவதாக டெல்லியிலிருந்து தகவல் கசிந்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு உள்பட மத்திய அமைச்சர்கள் சிலர், திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்ய விரும்புதாகவும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன. அதேபோல, தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களும் திருப்பதிக்குச் செல்ல திட்டமிடுகின்றனர்.