Skip to main content

கூவத்தூர் கூத்தாடிகள்..! கமல்ஹாசன் கடும் தாக்கு..!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
kamal haasan

 

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இணையதளத்தின் வழியாக கட்சியினரிடம் கலந்துரையாடினார். 

 

அப்போது அவர், கரோனாவை காரணம் காட்டி கிராம சபையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. கரோனா வைரஸ் டாஸ்மாக் கடைக்குள் செல்வதில்லை. அவர்கள் நடத்தும் விழாக்களுக்குள் செல்வதில்லை. அவர்களை கேள்வி கேட்கும் நேரம் நெருங்கிவிட்டது. இதற்காக நாம் போராட வேண்யுள்ளது. அதற்காக நேரம் வந்துவிட்டது என்றார்.

 

தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் என்னை மாதிரியான ஆட்கள் வரும்போது கூத்தாடிகள், இவர்களெல்லாம் சினிமாக்காரர்கள், இவர்கள் அரசியலில் என்ன பண்ண முடியும் என்று கேலி செய்தவர்கள் இருக்கிறார்கள். கூத்தாடிகள் என்று நம்மை கிண்டல் செய்தபோது, அதில் பலர் முதல்வர்களாக வந்து விட்டார்கள். ஆனால் இன்றைய நிலையில் கூவத்தூர் கூத்தாடிகள் எங்கு கூட வேண்டுமோ அங்கே கூடியிருக்கிறார்கள். கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை நடந்திருக்கிறது. இவர்கள்தான் கூத்தாடிகள், நிஜ கூத்தாடிகள் இவர்கள்தான். இந்த கூத்தாடிகள் இருக்கக்கூடாது. இவர்கள் லஞ்ச கூத்து மனதெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த அம்பலவானர்கள் இவர்கள், இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அது நம்முடைய கடமை” இவ்வாறு பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்