நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துவதற்காக சென்னை வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நேற்று சென்னை வந்தடைந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது. அவருடன் தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும் சென்னை வந்துள்ளனர்.
முதற்கட்டமாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் இன்று பிற்பகல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.