
குட்கா ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் ராஜேந்திரன், குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவின் பெண் உதவியாளர், குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள், பினாமிகள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையானது, கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் நடந்த வருமான வரி சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில் நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.