Skip to main content

அமீத்சா இடத்தில் ஜே.பி.நட்டா! பாஜகவில் புதிய முடிவு!   

Published on 09/01/2020 | Edited on 09/01/2020


                     

பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டாவை நியமிக்க பாஜகவில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

 

 BJP


பாஜகவின் தேசிய தலைவராகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார் அமீத்சா. உள்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்ட போதே கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்கிற கோரிக்கை பாஜகவிலும் ஆர்எஸ்எஸ்சிலும் வலுத்தது. 
 

அதேசமயம், பல்வேறு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அமித்சாவின் மாற்றம் தேவையில்லாதது. அவரின் கட்சி பணிகள், வியூகங்கள் தேர்தலுக்கு அவசியம் தேவை என்கிற கருத்தும் வலுப்பெற்றதால் தலைவர் பதவியில் அமீத்சா தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.


 

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் பதவி என்பது மிகவும் அடர்த்தியான பணிகளை உள்ளடக்கியது. அதனால் கட்சி பணிகளையும் கவனிப்பது சிரமமாக இருக்கும் என ஆலோசிக்கப்பட்டு கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டாவை நியமித்தனர். கட்சியின் 80 சதவீத பணிகளை நட்டாதான் கடந்த 6 மாதங்களாக கவனித்து வருகிறார். 


 

இந்த நிலையில், உள்துறை அமைச்சரக பணிச்சுமை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலக அமீத்சா முடிவு செய்துள்ளாராம். இதனைத் தொடர்ந்து கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டாவை நியமிக்க முடிவு செய்துள்ளனர் என டெல்லி தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் இதனை ஆமோதித்திருப்பதாக தெரிகிறது. 

 


         
 

சார்ந்த செய்திகள்