தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இதையடுத்து, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாவட்டந்தோறும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் திராவிட இயக்க பேச்சாளரும், சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத்.
சசிகலாவின் ஆடியோ அரசியல் எடுபாடாது என்று அதிமுகவினர் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, ஆடியோ அரசியல் எடுபட்டதால்தான் இன்று அதுபற்றி விவாதம் நடக்கிறது. ஆடியோ அரசியல் எடுபட்டதால்தான் அதிமுகவின் கூடாராமே கதி கலங்குகிறது. ஆடியோவுக்கே இப்படி ஆடிப்போனதால்தானே மாவட்டந்தோறும் கூட்டத்தைக் கூட்டி சசிகலாவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் போடுகிறார்கள். ஆகவே ஆடியோ நன்றாகவே வேலை செய்கிறது. ஆடியோ அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
கட்சிக்காக உழைத்தவன், கட்சிக்காக தன்னையே இழந்தவன் எல்லாம் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கட்சி தவறான பாதையில் செல்கிறது என்பதை தொண்டர்கள் புரிந்துகொண்டார்கள். இவ்வாறு கூறினார்.