72வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
நாட்டின் 72-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர துணை ராணுவப்படையினர், ஸ்வாட் படையினர், குறிபார்த்து சுடுகின்ற ஸ்நைப்பர் வீரர்கள், விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தும் வீரர்கள் என பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் சரியாக 7:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா. பின்னர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.