குரங்கணி மலை காட்டுத்தீயில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். 3 பேர் திருப்பூரைச்சேர்ந்தவர்கள். ஒருவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். மீட்கப்பட்டவர்கள் தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் சந்தித்து நலம் விசாரித்தார். மீட்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எந்தவித காயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலையில் இருந்து இறங்கி வரும்போது தீ விபத்து ஏற்பட்டதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீட்கப்பட்டவர்கள் விபரம்: திருப்பூரைச்சேர்ந்த ராஜசேகர்(வயது 29), பாவனா(வயது12), சாதனா(வயது11), ஈரோட்டைச்சேர்ந்த நேகா(வயது 9), சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோனிஷா (வயது 30), சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த பூஜா(வயது 27), சென்னை குரோம்பேட்டையைச்சேர்ந்த சகானா (வயது 20) .
ஈரோடு, திருப்பூர், சென்னை, கோவையைச்சேர்ந்த 36 பேர் நேற்று தேனி மாவட்டம் போடியில் குரங்கணி மலைப்பகுதி அருகே உள்ள கொழுக்கு மலைக்கு சென்றனர் . இவர்களில் ஒருவர் இறந்துள்ளார். 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.