Skip to main content

ஸ்டேடியத்தில் தந்தை, இன்ஸ்டாவில் மகள்! கலக்கும் தோனி மகள்...

Published on 30/04/2018 | Edited on 02/05/2018

ஐபிஎல் தொடங்கியாச்சு, சென்னை அணிய கலாய்ச்சவங்க எல்லாம் இப்போ என்ன சொல்லி தப்பிக்கலாம்னு யோசிக்குறாங்க. முதல் ஆட்டம் ஆரம்பித்து இதுவரை இரண்டில் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது. என்னதான் இது வயதானவர்கள் கூட்டம் என்று பலர் சொன்னாலும், இவங்கதான் எப்போதும் கில்லி என்கிறார்கள் ரசிகர்கள். தல தோனிக்கு எங்க போனாலும் சரி அவருக்குனு ஒரு தனி கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். ஆனால் இந்த வருடம் கொஞ்சம் அதிகமாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்துகொண்டு இருக்காங்க. ஒன்னு தோனிக்காக, இன்னொன்னு அவர் பொண்ணு ஸீவாக்காக. ஸீவா தன் அப்பா, அம்மாவிடம் செய்யும் சேட்டை எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு மக்கள் எல்லோரையும் பார்க்க வைத்து, தோனியை ரசிக்காத ஒரு சிலரைக் கூட தன் மழலை அழகால் ஈர்த்திருக்கிறார் ஸீவா.
 

ziva dhoni

 


ஸீவா பிறந்தும், அவரைப் பார்க்க இந்தியா திரும்பாமல் இருந்தவர் தோனி. ஒரு மாதம் கழித்தே அவரைப் பார்த்தார். அதன்பிறகு அவர் எங்கு எந்த நாட்டில் எந்த ஊரில் மேட்ச் விளையாட சென்றாலும், அவருடன் சாக்ஷியும், ஸீவாவும் இருப்பார்கள். ஸீவா தற்போது எல்லோருக்கும் செல்லக்குழந்தையாக, தங்கள் வீட்டு பிள்ளை போல் பார்க்கப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம் தோனியாக இருந்தாலும், ஸீவாவின் மழலை தனத்துடன் செய்யும் சுட்டித்தனம், குரல் என எல்லாமே நம்மை அவரின் ரசிகராக்கிவிடும். முன்பு மஹி மஹி என்று தனது அப்பாவை கூப்பிடும் அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு, ஸீவாவ பாருடா தல மாதிரியே பணிவா பேசுது என்று சொல்வார்கள். வேறொரு வீடியோவில், அதில் சாக்ஷி மங்கி பேஸ் என்று சொன்னவுடன் அப்பாவும், பொன்னும் உடனே தங்கள் இருவரது வாயையும் குரங்கை போன்று வைத்துக்கொண்டு! ஹாஹா நினைத்தாலே சிரிப்புதான். கேப்டன் விராட்டுக்கும், தோனிக்கும் இடையில் சண்டை என்று பேசிவந்தபோது. விராட்  ஸீவாவுடன் பூனை போன்று சத்தம் எழுப்பி விளையாடுவது செம வைரலானது. அதில் ஸீவா கியூன் ஹை கியூன் ஹை என்று சொல்ல, அவரும் அதையே மெதுவாகவும் பொறுமையாகவும் சொல்வார். செமையாக இருக்கும் அந்த வீடியோ.
 

sharuk with ziva


இப்படியெல்லாம், ஒரு பிரபலமானவரின் பொண்ணு வைரலாவதில் பெரிது ஒன்றுமில்லை. ஆனால் ஸீவாவுக்கு என்று ரசிகர் மன்றமே இன்ஸ்டாகிராமில் இருக்கிறது. ஷாக்ஷியோ அல்லது தோனியோ ஸீவா இருக்கும் போட்டோ வீடியோவை பதிவேற்றினால் இவர்களும் தங்களது பக்கத்தில் பதிவேற்றுகின்றனர். ஐபிஎல் ஆரம்பித்ததிலிருந்தே, ஒரு பக்கம் ஸீவாவின் சேட்டைகள் எல்லாம் பதிவிடப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. சென்னையில் நடந்த கொல்கத்தாவுடனான மேட்சை பார்க்க வந்த ஸீவாவை, பாலிவுட் சூப்பர்ஸ்டார் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதுவும் அந்த போஸ்கள் எல்லாம் ஸீவா சொல்ல, ஷாருக்கும் தந்தார். தன் கன்னத்தை விரலால் இழுத்து சிரிப்பது போன்று செய்தார். ஹையோ அத்தனை அழகு. அதை ஷாருக்கும் செய்ய அதை புகைப்படம் எடுத்து பதிவேற்றினார் ஷாக்ஷி. அதே மேட்சில் இன்னுமொரு புகைப்படத்தை அம்மாவும் மகளும் சேர்ந்து வெளியிட்டனர். அதில், நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு ஒரு கண்ணை அடிப்பது போன்று போஸ். இதை பலர் செய்து பார்த்து சமூக வலைத்தளங்களில் பல்பு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

ziva


பஞ்சாப்புடன் நடந்த மேட்ச் வழக்கம் போல, ஹார்ட் அட்டாக் வருவது போன்று போய்க்கொண்டிருக்கிறது. அந்த மேட்சை பார்க்க தோனியின் குடும்பமே வந்திருந்தது. பேட்டிங் ஆட சென்றவரை பார்த்த ஸீவா நான் அப்பாவிடம் போய் கட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்வதை வீடியோ பிடித்திருக்கின்றனர். அதனை மஹி டிவிட்டரில் பதிவு செய்து தனது மகளின் பாசத்தை வெளியுலகுக்கு காட்டினார். இதை பார்த்தபின்னர், ஸீவா போன்ற ஒரு பெண்ணை வளர்க்கணும் என்று கனவுலகில் வளம் வந்துகொண்டிருக்கின்றனர் பல தோனி ரசிகர்கள். இதுமட்டுமல்லாமல், ரெய்னாவின் மகளும், ஸீவாவும் தன் அப்பாக்களை போலவே நண்பர்களாக இருக்கின்றனர். அதற்கு அந்த போட்டோவே சாட்சி. ஹர்பஜனின் மகளும் இதில் தற்போது சேர்ந்துள்ளார். ஹர்பஜன்  திருக்குறள் முழுவதையும் தன் பிள்ளைக்கு கற்றுக்கொடுத்துவிடுவார் போல. எழுபது ரன்கள் பெங்களூர் அணிக்கு எதிராக அடித்துவிட்டு, அடுத்தநாள் மகளுக்கு முடி காய வைத்துக்கொண்டிருக்கிறார் இந்த சமத்து அப்பா தோனி. மும்பை அணியுடன் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ரசிகர்களையும், ஆட்டக்காரர்களையும் குஷி படுத்தும் வகையில் ஸீவா சியர் செய்யும் வீடியோ அழகின் உச்சம். தன் மழலை குரலில் "சென்னை துப்பர் கிங்ஸ்" என்று கடைசியாக கொடுக்கும் ஃப்ளையிங் கிஸ்ஸை பார்க்கும் போது தோனியும், அவரது மகளும் நம்முடைய சொந்தக்காரர்களை போலவே நெருங்கிவிட்டனர். 

 
News Hub