Skip to main content

'காஷ்மீர் விவகாரம்' ரஜினியும், விஜய் சேதுபதியும் ஒன்றல்ல - ஒய்.ஜி மகேந்திரன் மகள் அதிரடி!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், கல்வியாளருமான மதுவந்தியிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,
 

m


சமீபத்தில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். தான் யார் என்று அமித்ஷா தற்போது உலகத்துக்கு காட்டியுள்ளார் என்று அவரை ரஜினி புகழ்ந்துள்ளார். இதை பற்றிய உங்களின் கருத்து?

இதில் எந்த ஒரு தவறும் இல்லை. இருவரும் நண்பர்கள், அதையும் தாண்டி காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு போல்டான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை நான் ஆதரிக்கிறேன். ரஜினி சித்தப்பாவும் இதனை ஆதரித்து பேசியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்த நடவடிக்கையின் மூலம் பல நல்ல திட்டங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட இந்த சட்டம் 70 ஆண்டுகளாக தொடர்ந்தது. இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரில் இனி தேச விரோத சக்திகளின் தீவிரவாத நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்படும்.

நடிகர் விஜய் சேதுபதி உங்கள் நண்பர்தான். அவர் காஷ்மீர் விவகாரத்தில் தவறு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினி அதனை ஆதரித்துள்ளார், இந்த இருவேறு கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்? 

இந்த விவகாரத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அதை போலவே விஜய் சேதுபதியும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் என்ன ரஜினியை எதிர்த்து கருத்து தெரிவித்தாரா? அவர் அவருடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஏன் நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள்? சமூக வளைதலங்களில் இந்த மாதிரியான கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது தேவையில்லாத ஒன்று. அதையும் தாண்டி விஜய் சேதுபதியும், ரஜினிகாந்தும் ஒரே லீட் இல்லை. இருவரும் வெவ்வேறான நேரங்களில் அந்த கருத்தை தெரிவித்துள்ளனர். எனவே அதை ஒருவருக்கான பதிலாக நாம் பார்க்க வேண்டிய தேவையில்லை.

ரஜினி பாஜகவை ஆதரிக்கிற கருத்தை தெரிவிக்கிறார், ஆனால் விஜய் சேதுபதி அதனை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். இதை எப்படி புரிந்துகொள்வது? தொடர்ந்து பாஜகவின் முகமாகவே ரஜினி இருப்பார் என்று கூறப்படுகிறதே?

ஒரு கட்சியில் இருக்கிறவங்க செய்கிற நல்ல விஷயங்களை பாராட்டினால் உடனே நீங்கள் கட்சி முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது. அப்படி கருத்து சொன்னால் இவுங்க அவருடைய கண்ணு, காது, மூக்குனு சொல்றது என்னை பொறுத்த வரையில் முட்டாள்தனம். ரஜினி பெரிய ஐகான். அவருக்கு பிடித்த விஷயங்களில் அரசு நல்லமுறையில் நடவடிக்கை எடுத்தால் பாராட்டுகிறார், அவ்வளவுதான். இதை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்.

ஆனால், ரஜினி எல்லா விஷயங்களிலிலும் வாய் திறப்பதில்லையே? 

நீங்க ஏன் அவரு வாயை திறக்கனும்னு விரும்புறீங்க. அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர் ஏன் கருத்து சொல்லனும். அவருக்கு சரினு பட்ட இடங்களில் அவருடைய ஆதரவை தெரிவிக்கிறார். நீங்கள் உடனே பாஜக முகம், காதுனு சொன்னா நாங்க பொறுப்பாக முடியாது.