Skip to main content

யார் இந்த இந்திரா பானர்ஜி???

Published on 06/08/2018 | Edited on 06/08/2018
indhira banerjee


 

 

 

இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்க உள்ளார். 68 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக மூன்று பெண்கள் ஒரே நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற உள்ளனர். நாளை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள இவர் யார்?
 

1957, செப்டம்பர் 24 அன்று மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தாவிலுள்ள லொரெட்டோ ஹவுசில் பள்ளிப்படிப்பு, பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை படிப்பு, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்தார். 1983ல் பார்கவுன்சிலில் பதிவுசெய்து வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பின் 17 ஆண்டுகள் அவர் வழக்கறிஞராக தொடர்ந்தார். பின் பிப்ரவரி 5, 2002ல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். 14 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 08, 2016 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டார். இதன்பின் 8 மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 39வது தலைமை நீதிபதியாக  2017, ஏப்ரல் மாதம் 5ம் நாள் பொறுப்பேற்றார். தற்போது உச்சநீதிமன்றத்தின் 8வது பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.  
 

 

 

இவர் பல முக்கிய வழக்குகளில் பணியாற்றியிருந்தாலும் மக்கள் மத்தியில் மிக அதிகமாக கவனிக்கப்பட்டது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்குதான். 2018, ஜூன் 14ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டார். மேலும் தான் மனசாட்சிப்படிதான் தீர்ப்பளித்தேன், அதனால் கடவுளுக்கு மட்டுமே நான் பதில்சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனக் கூறினார். சட்டப் புத்தகம், சட்டம் என அனைத்தும் கையிலிருக்கும்போது மனசாட்சிப்படி தீர்ப்பளித்தேன், கடவுளுக்கு மட்டுமே பதில்சொல்ல கடமை பட்டுள்ளேன் எனக் கூறியதை  பலரும் விமர்சித்தனர்.