Skip to main content

கோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட தடை!சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவு

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

 

கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக்கூடாது என்று தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.   அப்படி இருந்தும், பலியிடுதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2003ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,  கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலைசெய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.  எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், அந்த உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டார்.

 

t

 

தற்போது, இந்து கோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட திரிபுரா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

t

 

திரிபுராவில் பிரசித்தி பெற்ற மாதா திரிபுரேஸ்வரி கோயிலில் பலிகொடுப்பதற்காக அம்மாநில அரசு தினமும் ஒரு ஆட்டை கோயில் நிர்வாகத்திற்கு வழங்கி வருகிறது.   அரசின் இந்த செயல்பாட்டை எதிர்த்து வழக்கறிஞர் சுபாஷ் பட்டாச்சார்ஜி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,  ’’கோயில்களில் பலியிட ஆடுகளை வழங்க அரசு பணம் கொடுப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை.  உயிர்ப்பலிகளை அரசு தடுக்க வேண்டுமே தவிர, அரசே அதைச்செய்யக்கூடாது.

 

t

 

மாநிலத்தில் இந்துகோயில்களில் இனிமேல் ஆடு,கோழிகளை பலியிட தடை விதிக்கப்படுக்கிறது.  உள்துறை செயலாளர் இந்த உத்தராவை நடைமுறைப்படுத்த வேண்டும்.   கோயில்  நிர்வாகத்தினர்  இந்த உத்தரவை கடைப்பிடிக்கிறார்களா? அல்லது உத்தரவை மீறுகிறார்களா? என்பதை சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்