Skip to main content

கரோனா சிகிக்சையிலும் ஊழலா? கமிஷனால் தெறித்து ஓடிய கம்பெனிகள்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


சுமார் ஒன்றரை லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெறுமானம் உள்ள இந்த வெண்டிலேட்டர்களுடன் ஏற்கனவே தமிழக மருத்துவமனைகளில் இருக்கும் 3 ஆயிரம் வெண்டிலேட்டர்களை இணைத்தால்தான், ஒரு லட்சம் பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காலக்கட்டம் வரும்போது, உயிர் அபாயத்திற்கு உள்ளாகும் எட்டாயிரம் பேரைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
 

அவர்களிடம் ஏன் அமெரிக்கா கம்பெனியை நாடுகிறீர்கள்? இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்கள், தமிழ் நாட்டில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இவற்றின் மூலம் பெறலாமே எனக் கேட்டோம். இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றுக்களை கண்டுபிடிக்கும் கருவியை 'மைலேப்' என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்திடம் சோதனை செய்யும் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்தால் எங்களால் இப்பொழுது செய்ய முடியாது எனக் கைவிரித்துவிட்டது. அதனால்தான் சுகாதாரப் பொருட்களை கரோனா காலத்தில் வாங்கும் அதிகாரம் பெற்றிருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாநாத், சோதனைக் கருவிகளை சீனாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளார். இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் கருவிகள் வேண்டும் என சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு லட்சம் கருவிகளை தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. அந்தக் கருவிகளை அமெரிக்கா தனக்கு வேண்டும் என எடுத்துக்கொண்டு சென்றதால் சோதனைக் கருவிகள் தமிழகத்திற்கு வரவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

 

admk



ஆனால் இந்த வெண்டிலேட்டர் விவகாரத்தில் ஊழலும் இருக்கிறது. நூற்றுக்கணக்கான கோடிகள் பெறும் இந்த வெண்டிலேட்டர் ஆர்டர்களைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த பல கம்பெனிகள் போட்டிப் போடுகின்றன. அந்தக் கம்பெனிகளிடம் ஆனந்த் என்கிற தமிழக சுகாதாரத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அந்தப் பேச்சுவார்த்தையில் 30 சதவிகிதம் கமிசன் வேண்டும் என அரசு தரப்பிலிருந்து வலியுறுத்தப் பட்டதால் அந்தக் கம்பெனிகள் தலைத்தெறிக்க ஓடிவிட்டன. அதனால்தான் கமிசன் தொகைக்கு ஒத்துக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வெண்டிலேட்டர்களைப் பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியது.
 

http://onelink.to/nknapp


வெண்டிலேட்டர் விசயத்திலும், சோதனைக் கருவிகள் விசயத்திலும், கரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும் உடைகளை வாங்குவதிலும் பெரிய அளவு பேரங்கள் நடந்திருக்கின்றன என்கிறார்கள் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆனந்த் யார்? என விசாரித்தபோது, அவர் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர். ஆனால் முதல்வர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று சொல்கிறார்கள். சீனாவில் இருந்து சோதனைக் கருவிகள் வருவது தாமதம் ஆவதால் தமிழகத்தைச் சேர்ந்த அரசு நிறுவனமான 'டைசல்' மூலமாக உற்பத்தி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

admk



தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே கரோனா இருக்கிறதா என்பதற்கான சோதனை நடைபெற்றுள்ளது. தற்போது அதனை விரிவுப்படுத்தி சோதனை செய்வதற்கு தமிழக அரசு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால் கேரளாவைப் போல் நோய் பாதித்தவர்களை, அவர்கள் யார் யாருடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை தமிழக சுகாதாரத்துறையால் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த அளவிலும் டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இவர்களைத்தான் நோயாளிகளாகத் தமிழக சுகாதாரத்துறை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நரேந்திரமோடி ஊரடங்கு உத்தரவை அறிவிப்பற்கு முன்பே ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை தமிழக அரசு அறிவித்தது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமானால் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடும் எனத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பயப்படுகிறார்கள். அதைத் தவிர்க்க வேண்டுமென்றால் யார் யாருக்கு கரோனா நோய் வந்திருக்கிறது. அவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் எனத் தெளிவாகக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் 30 வாரங்களில் தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அமெரிக்காவைப் போல் உயரும். அதற்காக அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்துவற்கான சோதனைக் கருவிகளைத் தமிழக அரசு பெற வேண்டும்.

உயிர் காக்கும் கருவிகளான கரோனா தடுப்பு உடைகள் மற்றும் வெண்டிலேட்டர்களை எவ்வித ஊழல் புகாருக்கும் ஆட்படாமல் உடனடியாக வாங்க வேண்டும் என அலறித் துடிக்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.
 

இதுபற்றி அரசின் கருத்தறிய சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் இராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். உடனடியாக போனை அட்டன் செய்த இராதாகிருஷ்ணன், "தனக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது" என்றார். அதற்கு அடுத்தபடியாக சுகாதாரத்துறை இயக்குநரக அதிகாரியான குழந்தைசாமியை தொடர்பு கொண்டோம். அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் தொடர்பு கொண்டோம். அவரும் பேச மறுத்துவிட்டார்.

ஊழல், ஊழல் என அரசு துறைகளைப் பற்றி செய்திகள் வரும். பொதுமக்கள் உயிரோடு விளையாடும் கரோனா சிகிக்சையிலும் ஊழலா எனக் கவலை தெரிவிக்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.