வேதாந்தா நிறுவனம் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பானியா வம்சத்தை சேர்ந்த அனில்அகர்வால். மலைகளில் இருந்து தாதுக்களை வெட்டியெடுத்து தங்கம், ஈயம், இரும்பு, தாமிரம், செம்பு போன்றவையும், பூமிக்கு கீழிருந்து கச்சா எண்ணெய் எடுத்து பெட்ரோல், டீசல், ஒயிட் பெட்ரோல், மண்ணெண்ணய் தயாரிப்பது, மின்சார உற்பத்தி என பல தொழில்கள் செய்கின்றன இந்நிறுவனம். இதற்காக உலகின் பல நாடுகளில் தொழிற்சாலை வைத்துள்ளது. மேற்கண்ட தொழில்களை சார்ந்த உபதொழில்களுக்காக துணை நிறுவனங்களையும் தொடங்கி நடத்துகிறது. அதில் ஒன்றுதான் தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை.
உலகம் முழுவதும் நேரடியாக இந்த நிறுவனத்தில் சுமார் 35 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் சுமார் 12 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்கிறது அந்நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை. (12 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை இன்றைய இந்தியா ரூபாய் மதிப்பில் பெருக்கிக்கொள்ளுங்கள்) 2003ல் லண்டன் பங்கு சந்தையில் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.
1988ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க இந்தியாவில் பதிவு செய்த இந்நிறுவனத்துக்கான அனுமதியை மத்தியில் காங்கிரஸ் அரசு வழங்கியது. இந்தியாவில் பலயிடங்களில் விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்க 1993ல் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அனுமதி வழங்கினார். அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டு 1996ல் உற்பத்தியை தொடங்கியது அந்நிறுவனம். இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையிலும், அமெரிக்காவின் பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தொடக்கம் முதல் ஏற்பட்ட விபத்துகளால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன, மறைமுகமாக பலவிதமான நோய்கள் தாக்கின. இதனால் இந்நிறுவனத்தை மூட வேண்டும் ஆரம்பம் முதலே மக்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். தற்போது அப்போராட்டங்கள் உச்சகட்டத்தில் வந்து போராட்டத்தை கலைக்கிறேன் என காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதன் விளைவாக 13 பொதுமக்கள் உயிர்கள் அரச பயங்கரவாதத்துக்கு பலியாகியுள்ளன.
இப்படி அரசும், அரசியல்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வேதாந்தா நிறுவனத்துக்கு சேவை செய்வதன் நோக்கம்மென்ன என ஆராய்ந்தபோது, தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை தரும் கட்சியாக வேதாந்தா நிறுவனம் உள்ளது. இந்த தொகைக்காக ஆட்சியில் உள்ள, எதிர்கட்சி வரிசையில் உள்ள, சட்டமன்ற, நாடாளன்றத்தல் ஒருநாளாவுது உறுப்பினராக உட்கார்ந்துவிட மாட்டோமா என ஏங்கும் கட்சிகள், லட்டர் பேடு அமைப்புகள் வரை அனைத்துக்கும் தகுதிக்கு ஏற்றாற்போல் நக்கொடை வழங்குகிறது இந்நிறுவனம். இதுதான் இந்நிறுவனத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளை பதுங்க வைக்கிறது.
13 உயிர்களை பலிக்கொண்ட பின்பாவுது மக்கள் பக்கம் நிற்கலாம்மே இந்த கட்சிகள் என நினைத்தால் அங்குதான் எதிர்காலம் கண் முன் வந்து நிற்கிறது இந்த கட்சிகளுக்கு. இது பொன்முட்டையிடும் வாத்து ஒரேயடியாக அறுத்துவிட வேண்டாம் என்கிற ஆசையில் பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்கிற கதையாக நடிக்கிறார்கள்.
இவ்வளவு நக்கொடை மற்றும் செலவு செய்து நிறுவனத்தை நடத்த வேண்டும்மா வேதாந்தா குரூப் என்றால் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியிலிருந்து மெல்ல எழ துடிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களும் வீழ்ச்சியில் இருந்து எழ முயல்கின்றன. அப்படி எழ துடிக்கும் நிறுவனங்களில் ஒன்று வேதாந்தா குழுமம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக மூடிவிட்டால் இரண்டு பெரிய சுரங்கங்களை அது மூட வேண்டியிருக்கும். இதனால் நிறுவனம் படுபாதாளத்துக்கு போய்விடும் என்கிறார்கள் பங்குசந்தை நிபுணர்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடியிருப்பதால் நிறுவனங்களின் தரநிர்ணயம் மற்றும் முதலீட்டு கடன் நிறுவனமான அமெரிக்காவில் இயங்கும் கோல்டுமென் சாக்ஸ் என்கிற முதலீட்டு வங்கி, வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை தகுதி குறைப்பு செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் அமெரிக்காவிலும், லண்டனிலும் குறையவங்கியுள்ளன. இந்தியாவில் மும்பை பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று (25.5.18 ) 243 ரூபாயாக உள்ளது. இதுவே கடந்த மே 3ந்தேதி 294 ரூபாயாக இருந்தது. இப்படி பங்குவிலை குறைவினால் அதிர்ச்சியான வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் ஒரு குழு பொய்யாக போராடுகிறது, போராட்டம் முடிவுக்கு வந்து ஆலையை திறப்போம் என கடந்த மாதம்மே அறிக்கை விட்டது.
போராட்டத்துக்கு, சட்டத்துக்கு பயந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை சரிந்துவிடும். இதனால் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீதான பயத்தால் தங்களிடம்முள்ள பங்குகளை விற்க துவங்குவார்கள் இதனால் அதன் பங்குகள் இன்னும் விலை குறையும். நிறுவனத்தின் வீழ்ச்சி அதிகரிக்கும் இதனால் வேதாந்தாவுக்கு கடன் வழங்கும் சர்வதேச நிதி அமைப்புகள் கடன் வழங்காமல் நிறுத்தும், இதனால் நிறுவனம் பலப்பல பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும். இதனாலயே இந்திய மேல்மட்ட அரசியல் அதிகார அமைப்பின் துணையோடு தமிழகத்தில் தனது நிறுவனத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை நசுக்கி நீதிமன்றம் மூலம் தொழிற்சாலையை திறந்து நடத்த முடிவு செய்துயிருக்கும் என்கிறார்கள் இந்நிறுவனத்தை பற்றி அறிந்தவர்கள்.
அதோடு நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களை எப்படிப்பட்ட வழியிலும் ஒடுக்கவும், மேல்மட்ட அரசியல் அதிகார அமைப்போடு பேச நிறுவனத்தின் சி.இ.ஓவாக தமிழர் ஒருவரை கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள் வேதாந்தா நிறுவன பங்குதாரர்கள். வெங்கட் என்கிற சீனுவாச வெங்கடகிருஷ்ணன் என்பவர் தான் அவர். சென்னையில் படித்து ஆடிட்டரானவர். இந்தியா, ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. உலகின் மிகப்பெரிய மூன்றாவது தங்க உற்பத்தி நிறுவனமான ஆப்ரிக்காவின் ஆங்கிலோ கோல்டு அசந்தி நிறுவனத்தில் முதன்மை தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் இவர் என்கிறது இவரது பணி பின்னணி. இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றியபோது, நிறுவனத்திற்க்கு எதிராக நடந்த தொழிலாளர் போராட்டத்தை நசுக்க அரசாங்கத்தின் உதவியை நாடியபோது, 32 உயிர்களை பலிவாங்கியது அந்நாட்டு அரசப்படை என்கிறது. இவர்தான் தற்போது வேதாந்தா நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்கும் முன்பே நிறுவனத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13 உயிர் பலியை வாங்கியுள்ளது.
இந்த கருத்துக்களை மெய்ப்பிப்பது போல, அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில்அகர்வால் வெளியிட்டுள்ள டுவிட்டர் கருத்து அதைத்தான் மறைமுகமாக கூறுகிறது.
காற்றுள்ள பந்து ஒவ்வொரு முறை நீருக்குள் எவ்வளவு வேகமாக அழுத்துகிறோம்மோ, அதைவிட பன்மடங்கு வேகத்தில் மேலே வரும் என்பது அறிவியல் விதி. போராட்டத்தை நசுக்க ஒவ்வொரு முறை எத்தனை போராளிகளை பலி வாங்குகிறார்களோ அதை விட பன்மடங்கு போராளிகள் உருவாகுவார்கள் என்பது மக்கள் மன்ற விதி. நடவடிக்கை எடுக்கும் முன் அரசாங்கம் அதை மறக்காமல் இருந்தால் சரி.