'இஸ்லாமியப் பெண்களை வன்புணர்வு செய்வது இந்துக்களின் ஒருவகையான ஆயுதம். அது தவறல்ல. எதிர்காலத்தில் இஸ்லாமியர்களை அடக்கியாளும் வழி' என்பது ஆர்எஸ்எஸ், மோடி உள்ளிட்ட பாஜகவினரின் குரு சாவர்க்கரின் பொன்மொழி. “வன்புணர்வு என்பது வன்புணர்வுதான். அதை அரசியலாக்கக்கூடாது. உங்கள் அரசாங்கத்தில் இவ்வளவு பாலியல் வன்புணர்வுகள் ஏன் நடக்கிறது என்றோ, அடுத்து வரும் அரசாங்கங்களில் ஏன் நடக்கிறது என்றோ கேட்கக்கூடாது” என்று சாவர்க்கரை பின்பற்றியே லண்டனில் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமிய பெண்களை இந்துமத வெறியர்களான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பல்வேறு சமயங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி, குஜராத் கலவரத்திலும், முஸாபர்பூர் கலவரத்திலும் சரி, இஸ்லாமியப் பெண்களிடம் கொடூரமான முறையில் அத்துமீறியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கதுவா அருகே நாடோடிகளாக வாழ்ந்த இஸ்லாமிய குடும்பங்களை விரட்டுவதற்காக காவிக்கூட்டத்தினர் திட்டமிட்டனர். சமீபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை மூன்று நாட்கள் ஒரு கோவிலில் மறைத்து வைத்து நாசப்படுத்திக் கொன்றனர். இது நாடுமுழுவதும் பாஜகவுக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணமானது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஜம்மு பகுதியில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அது தோற்றது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று இந்து வழக்கறிஞர்களும், காஷ்மீர் அமைச்சர்களும் போராட்டம் நடத்தினார்கள். அதுபோலவே, உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ என்ற இடத்தில் ஒரு சிறுமியை பாஜக எம்எல்ஏ வன்புணர்வு செய்தார். அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள்.
சாவர்க்கர்
இந்தக் கொடூரமான நிகழ்வுகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்களோ, விஎச்பி தலைவர்களோ கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்தே, ஆர்எஸ்எஸ் சாவர்க்கரே இதுபோன்ற கற்பழிப்புகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் சில பத்திரிகையாளர்கள் வெளியிட்டனர்.
சாவர்க்கரைத்தான் பாஜகவினர் உள்பட காவிச் சங்கத்தினர் தங்களுடைய போற்றுதலுக்குரிய குருவாக வணங்குகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவருடைய படத்தை 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் திறந்துவைத்தார். இப்போதும் அவருடைய படத்துக்கு மோடி தினமும் மலர் தூவுகிறார். அப்படிப்பட்ட சாவர்க்கர் “இந்திய வரலாற்றில் ஆறு அற்புதமான சகாப்தங்கள்” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியப் பெண்களை வன்புணர்வு செய்வது ஏன் நியாயமானது என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
'கடந்த காலங்களில் இஸ்லாமியர்களின் படையெடுப்பு சமயத்தில் இந்துப் பெண்கள் ஒழுக்கத்தை காப்பாற்ற தற்கொலை செய்துள்ளனர். இக்கட்டான காலகட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது இந்துக்கள் கருணை காட்டி காப்பாற்றி இருக்கிறார்கள். சத்ரபதி சிவாஜி படையெடுப்பில் இஸ்லாமியரின் மகளை பத்திரமாக அனுப்பியிருக்கிறார். போர்ச்சுக்கீசிய கவர்னரின் மனைவியை பாதுகாப்பாக அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் தவறு. இஸ்லாமிய படையினர் இந்துக்களை நடத்தியதைப் போல, இந்துக்களும் இஸ்லாமியப் பெண்களை சேதப்படுத்த வேண்டும். இஸ்லாமியப் பெண்களை இந்துக்கள் வன்புணர்வு செய்வார்கள் என்ற பயம் இருந்தால் எதிர்காலத்தில் இஸ்லாமியர்கள் தயங்குவார்கள்' என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.