Skip to main content

சாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு! நக்கீரன் 'EXCLUSIVE'...

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sathankulam

 

சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம் அவர்களது உடலை உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த உடற்கூறாய்வில் என்ன நடந்தது. அவர்களது உடலில் எப்படிப்பட்ட காயங்கள் இருந்தன. அவர்களது மரணம் எதனால் ஏற்பட்டது என்கிற தகவல்கள் நக்கீரனுக்கு Exclusive-வாக உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களின் வட்டாரத்தில் இருந்து கிடைத்தது.

 

உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் உடற்கூறாய்வில் தடய அறிவியல் துறை பேராசிரியர், அதே துறையைச் சார்ந்த இணை பேராசிரியர் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர், உதவி பேராசிரியர் என இருவர் மட்டுமே இருந்தனர். இணை பேராசிரியர், ஒரு பெண் மருத்துவர். அவர் கடைசி நேரத்தில் உடற்கூறாய்வு செய்யும் குழுவில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மதுரை மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் இருந்து தடய அறிவியல் துறை இணை பேராசிரியர் ஒருவரை இடம் பெற வைத்திருக்கலாம். அப்படி எந்த முயற்சியும் செய்யாமல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தடய அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்கும் ஒரு மாணவரை வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ எடுக்கப்பட்ட உடற்கூறாய்வில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மரணங்களை உடற்கூறாய்வு செய்யும்போது பின் பற்றவேண்டிய டிஜிட்டல் அட்டாப்சி எனப்படும் நவீன உடற்கூறாய்வு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இறந்தவரது சடலத்தை சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு உட்படுத்தினால் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் தெளிவாகத் தெரியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முறையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியும். அவர் எதனால் இறந்தார் எனத் தெளிவாக தெரிந்துவிடும். அந்தப் பதிவுகள் எலக்ட்ரானிக் முறையில் அழிக்கப்பட முடியாத வகையில் இருக்கும்.

 

இங்கிலாந்தில் சமீபத்தில் சந்தேகப்படக்கூடிய விதத்தில் நடந்த மரணங்களை 'டிஜிட்டல் அட்டாப்சி' முறையில் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அதில் மரணத்திற்கான காரணம், மரணம் அடைந்தபோது இருந்த உடல்நிலை ஆகியவை மிகத் தெளிவாக தெரிந்தது. அந்த முறையில் இந்த இருவரது உடற்கூறாய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

 

பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் உடற்கூறாய்வின் அடிப்படையில் இருவரது மரணத்திற்கான காரணம் (Homicide due to prolonged physical and psychological torture) நீண்ட நேரம் உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மூலமாக மரணம் ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் தங்களது ரிப்போர்ட்டில் எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக அவர்களது பின்தொடை மற்றும் ஆசன வாயிலுக்கு அருகே உள்ள பகுதி மற்றும் ஆசன வாயில் பல இடங்களில் சதை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.(Multiple contusions all over the gluteal and rectum region and in the upper and middle part of thigh). rectum எனப்படும் குடலின் கடைசிப் பகுதியான 12 செ.மீ. நீளமுள்ள மலக்குடல் எனப்படும் ஆசனவாய் வழியாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. (rectal bleeding) இதனால் அவர்களுக்கு ரத்தக் கசிவு அதிர்ச்சி (Haemorrhagic shock) ஏற்பட்டுள்ளது. இந்த ரத்தக் கசிவால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர்களது ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது. இதனால் இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கிறது என அந்த அறிக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


இதுபற்றி நம்மிடம் பேசிய உடற்கூறாய்வு மருத்துவ நிபுணர் ஒருவர், "அவர்களது விதைப்பை, ஆணுறுப்பு (scrotum, penis) ஆகிய பகுதிகளில் காயங்கள் இல்லை. அவர்களது வயிறு மற்றும் மார்பு கூட்டிற்குள் (abdomen, thorax) எந்தப் பாதிப்பும் இல்லை. எந்தக் காயமும் இல்லை. மரணத்திற்கான காரணம் அவரது இடுப்புப் பகுதியில் இருந்த ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட ரத்தப்போக்குதான்'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

நாம் இதுபற்றி கருத்தறிய புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கருணாநிதியிடம் கேட்டோம். "இந்த ரிப்போர்ட்டின்படி மரணம் நிகழ்ந்திருக்குமானால் இது கொடுமையான, சித்ரவதையினால் ஏற்பட்ட மரணம். இதைச் செய்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால்தான் இதில் உண்மைகள் வரும் என்றார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் சுப்ரீம் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்'' என்றார்.

 

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என எடப்பாடி அறிவித்திருப்பதில், டாக்டர் கருணாநிதி போன்றவர்களின் நியாயக் குரலும் அடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.