Published on 06/10/2018 | Edited on 06/10/2018
நாளை தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது, ரெட் அலர்ட் என்பது அதிகனமழையை குறிப்பிடும் சொல்லாகும். இயற்கை என்பது எப்போதுவேண்டுமானாலும் மாறக்கூடியது. ஒருவேளை நாளை அது நடக்காமலுமிருக்கலாம், நடக்கலாம், மிக அதிகமாகவும் நடக்கலாம். இப்படி பல வாய்ப்புகள் இருக்கின்றன ஆனால் அனைத்தையும் சமாளிக்கும் வகையில் நாம் இருக்கவேண்டும். ஒருவேளை நாளை ரெட் அலர்ட் நிகழ்ந்தால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
- தேவையான அளவு உணவு, தண்ணீர் ஆகியவற்றை இருப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
- இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் எதுவுமில்லை. அதனால் செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்.
- டார்ச்லைட், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டி ஆகியவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.
- போலியான செய்திகளை நம்பாதீர்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள். வானிலை ஆராய்ச்சிக் கழகமோ, பேரிடர் மேலாண்மை குழுவோ அல்லது ஆணையரோ (CRI) கூறியிருந்தால் மட்டும் நம்புங்கள்.
- செய்திகளை கவனியுங்கள். உங்கள் இருப்பிடம் குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் (வீடு மேட்டுப்பகுதியா, தாழ்வான பகுதியா, அருகில் குளம், ஏரி, கண்மாய், ஆறு போன்றவைகளை கவனிக்கவேண்டும்)
- அவசரகால எண்களை உடனே பார்க்கும்படியான இடத்தில் எழுதி வையுங்கள்.
- எதற்கும் பதறாமல், பயப்படாமல் முடிவெடுங்கள்