கிரிமினல்களை பிடிக்க தபால் கார்டு உதவுமா?
கொலை, கொள்ளை, போதை மருந்துக் கடத்தல் என்று பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குப் போய் தங்கியுள்ள பயங்கர குற்றவாளிகளுக்காக சிறப்புத் தபால் கார்டுகளை ஐரோப்பியன் போலீஸ் வெளியி்டடுள்ளது.
ஐரோப்பிய யூன்யனில் இடம்பெற்ற நாடுகளில் குற்றச்செயல்களில் தொடர்புடைய இவர்களுடைய பெயரில் வெளியிடப்படும் இந்த கார்டுகளை சுற்றுலாப் பயணிகள் கையில் கிடைக்கும்படி செய்கிறார்கள்.
அந்தக் கார்டுகளில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகளை அடையாளம் பார்க்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர்.
இந்தத் தபால் அட்டைகள் பல குற்றவாளிகளை பிடிக்க உதவியிருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள்.
தபால் அட்டைகள் தவிர, குற்றவாளிகளுக்காகவே ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் போலீஸார் தங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை அறிந்த சிலர் அவர்களாகவே போலீஸில் சரணடைந்திருக்கிறார்களாம்.
புதுசுபுதுசாத்தான் யோசிக்கிறாங்கே...
A/C