இயற்கை வழிபாடுதான் உண்மையான இந்து மதத்தின் வழிபாடு. ஆன்மீகவாதிகளும் இயற்கை வழிபாட்டைதான் கடைபிடித்து நடந்தார்கள். ஆனால் இன்று யார், யார் இயற்கையை அழிக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆன்மீகவாதிகள் ஆகிவிட்டார்கள். சபரிமலையை பொறுத்துவரை ஐய்யப்பன் காட்டோடு ஒன்றாகிவிட்டார். காட்டை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு வேண்டியவர்கள்தான். நான் உண்மையான ஐயப்பன் பக்தர். இந்த நெய் அபிஷேகம் செய்வது இதெல்லாம் ஒன்றும் இல்லை. 1902 வரைக்குமே அங்கு பழங்குடியினர்தான், அவர்கள் வழிபாடுதான். அதற்குபின்புதான் பார்ப்பனியம் வந்தது. அதற்கு தெளிவான வரலாற்று ஆதாரங்களும் உள்ளது.
இன்றைக்கு நிலைமை இதுதான், தெருவுக்கு, தெரு யாரு கோவில் கட்டிட்டு இருக்காங்க. கட்சி கவுன்சிலர், அதற்கு வீட்டுக்கு, வீடு வரி கட்டிட்டு இருக்காங்க தமிழ்நாட்டுல, 5000, 10,000 கட்டிட்டு இருக்காங்க கும்பாபிஷேகத்திற்கு. அது ரொம்ப பூதாகராமாக ஆகிவிட்டது. சத்குரு ****தான், ஆனால் அவர்கிட்ட போறவங்க எல்லாம் திருடர்கள் கிடையாது. உண்மையான குருகிட்ட போறோம்னு நினைத்துக்கொண்டுதான் போறாங்க. நித்தியானந்தாகிட்ட உண்மையான குருகிட்ட போறோம்னு நினைத்துக்கொண்டுதான் போறாங்க. அவுங்க திருடர்களாக இருக்கிறதுக்கு இவுங்க எப்படி பொறுப்பாவாங்க. கவுன்சிலர் யாருங்க அந்தந்த ஊர்ல கோவில் கட்டுவதற்கு, அரசியல்வாதிங்க கட்டிட்டு இருக்காங்க பாக்கவே ரொம்ப இதா இருக்கு, தாங்கவே முடியலை. மசூதி ஏன் கட்டுறிங்க, சர்ச் ஏன் கட்டுறிங்க, புத்த மடாலயங்கள் ஏன் கட்டுறிங்க அப்படினு எல்லாத்தையும்தான் கேக்கணும். மகாவீரர் கடவுளே இல்லைனு சொன்னவரு, ஆனால் அவருக்கே சிலை வைத்து அவருக்கே கோவில் கட்டுறாங்க. அதுவும் பெரிய, பெரிய கோவிலா கட்டுறாங்க, இந்து கோவில்களைவிட அது பெரியதாக இருக்கு. ரொம்ப கேவலமா இருக்கு. கடவுளுடைய வீட்லதான் நாம வாழுறோம். இந்த பூமி கடவுளுடைய வீடு, அதில்தான் நாம வசிக்கிறோம். கடவுளுக்கு வீடு கட்டிக்கொடுக்க மனிதனுக்கு தகுதி கிடையாது. நான் ஒரு வீடு கட்டுவேன், அதில்வந்து கடவுள் வாழ்வார் என்றால் அதைவிட அகந்தை வேற எதுவும் கிடையாது...
முழுஉரையையும் காண வீடியோவை க்ளிக் செய்யவும்...