Skip to main content

தமிழர்களின் ஆதி இசை பறை! பறை இசைக் கலைஞன் மு.பிராபகரனுடன் ஒரு நேர்காணல்!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
Prabhakaran


மௌனத்தைப் போலவே இசையும் ஓர் அமைதிக்கான பாதை தான். இதனால் தான் இந்திய திருத்தலங்கள் இசையோடு ஆய்ந்து இருக்கின்றன.  
 

பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள ‘’பறை’’ ஓர் இசைக் கருவி மட்டுமல்ல... தொல்குடி தமிழ்ச் சமூகத்தின் சொத்து என்றும்,  உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்.. என தெருக்களிலும், பள்ளி,  கல்லூரிகளிலும், சமூகப் பொதுக் கூட்டங்களிலும், கிராமப்புற மக்களிடையேயும் இந்த ‘’பறை’’ இசையைக் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரத்துடன் செயல் பட்டு வரும்’’விடியல் அறக்கட்டளை’’யின் இயக்குனரான கோவையைச் சேர்ந்த ‘’பறை’’ இசைக் கலைஞன் மு.பிரபாகரனுடன் ஒரு நேர்காணல் செய்தோம்.
 

நக்கீரன்: இந்திய திருத்தலங்களின் கடவுள்கள் இசையோடு (இசைக் கருவிகளோடு) நின்று இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்? 
 

பிரபாகரன்: ஆமாம். தெய்வங்கள் இசைக் கருவிகள் சுமந்து நிற்பதற்கு இசையின் தத்துவமும் மேலாண்மையையுமே காரணமாக இருக்கிறது.
 

சிவன் கையில் மருகம், பிரம்மா கையில் தாளம், வாரசி கையில் சங்கு, சரஸ்வதி கையில் வீணை, நாரதர் கையில் தம்புரா, நித்தியின் கையில் மத்தளம் என தெய்வங்கள் இசையை தூக்கிப் பிடித்திருப்பதை காணும் போது உண்டாகும் இன்பம் அலாதியானது.
 

 

 

நக்கீரன்:  ஐந்திணை நிலங்கள் இசையை எவ்வாறு பொருத்திக் கொண்டன?
 

பிரபாகரன்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படும் ஐந்திணை நிலங்களுக்கும் தனித்துவமான இசையும், இசைக்கருவிகளும் இருந்ததை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. சிலப்பதிகாரம் நூற்றுக்கும் மேற்பட்ட இசைப் பண்களை குறிப்பிடுகிறது .இந்த இசைப் பண்கள்தான் உலகெங்கும் இசையை இயக்குகிறது 
 

அதிலும் ‘’பறை’’ இசைக் கருவி மட்டுமல்லாது ஐந்திணை நிலத்தின் அடையாளமாகவும், நிலத்து மக்களின் அடையாளமாகவும், அம்மக்களின் செய்யும் தொழில் பயன்படும் கருவியாகவும் இருந்து வருகிறது.
 

குறிஞ்சியில் தொண்டகச் சிறுபறை, முல்லையில் ஏறுங்கோட்பறை, மருதத்தில் தண்ணும்மை, நெய்தலில் மீன் கோட்பறை, பாலையில் ஆறெறி பறை என்ற வரையறை பொருத்தமாக உள்ளது.
 

நக்கீரன்: இலக்கியத்திலும், வாழ்வியலிலும் ‘’பறை’’யின் பங்களிப்பு குறித்து?  
 

பிரபாகரன்: ‘’பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி’’ பறை எனப்பட்டது. போரில் அடைந்த வெற்றியை பறையால் சாற்றியதை ‘’இசைப் பறையொடு வென்றி நுவல’’என்று புறநானூறு கூறுகிறது.
 

திட்டைப் பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப் பறை, அரிப்பறை, மண்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை என சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் ‘’பறை’’ குறிப்பிடப்படுகிறது.
 

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ‘’அறைபறை யன்னர் கயவர்’’ என்றும், ‘’எம்போல் அறைபறை கண்ணாரகத்து’’ என்றும், ‘’அறைபறை நின்று மோதிட’’ என்ற இடங்களிலும் பறை ஓங்கி ஒலிக்கிறது.
 

 

 

வாழ்வியலில்... பண்டைய அரசர் காலத்தில் அரசரின் அறிவிப்புகளை முரசு அறைந்து அல்லது பறை அடித்து  மக்களுக்கு சொல்வது வழக்கமாக இருந்தது. பெருகி வரும் தண்ணீரை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போருக்கு எழுமாறு வீரர்களை அழைக்க, உழவு செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைப்பதற்கும், அறுவடை செய்வதற்கும், விலங்குகளை விரட்டுவதற்கும், நாட்டின் செய்தியினை மக்களுக்கு தெரிவிக்கவும், இயற்கை வழிபாடு, விழாக்கள் நடத்துவதற்கும் என மக்களின் வாழ்வியலோடு இணைந்தே வந்திருக்கிறது இந்தப் ‘’பறை’’.
 

தமிழ் நாட்டில் பல இடங்களில் முரசு மண்டபம் அமைத்து செய்தி அறிவிக்கும் முறை இருந்துள்ளது. பறை பிறத் தாளக் கருவிகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதை காலப்போக்கில் தமிழர்கள் அறியாமல் இப்பறையின் மூலம் வளர்ச்சிப் பெற்ற பிறத் தாள இசைக் கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து விட்டது ஆகப் பெரிய வருத்தம் தான். 
 

‘’பறை’’ அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் பெருங் கருவியாக இருந்தது. ஆனால் நம்முடைய அடையாளங்களில் மண்ணில் புதைப்பதற்கு சமமாக பறை இசையை புறக்கணித்து விட்டோம் என்பது இசைக்கான சாபக் கேடுதான்.
 

நக்கீரன்: இந்தியாவின் பிற மாநிலங்களில் ‘’பறை’’ மக்களிடையே பயன்படுத்தப் படுகிறதா? 
 

பிரபாகரன்: நான் முன்பே சொல்லியது போல பறை இல்லாத இசையை யாரும் செய்து விட முடியாது. பிற மாநிலங்களில் மக்களிடையே பறை வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில் பயன் படுத்தப்படுகின்றன.
 

ஆந்திராவில் ‘’ரோன்ஸ்’’, ‘’டோல்’’, ‘’புர்ர’’, ‘’சூரியப்பறை’’ , ‘’சந்திரப்பறை’’ என்ற பறை வகைகள் உள்ளன. அந்த ‘’ரோன்ஸ்’’ என்ற பறை செங்குத்தலான வடிவில் பயன்படுத்தப்படுகிறது. 
 

கர்நாடகத்தில் பழங்குடிகள் ‘’டாபா ‘’ என்ற பறை வகையை பயன்படுத்துகின்றனர். நாம் இங்கே பயன்படுத்தப்படும் ‘’தப்பட்டை’’ என்ற பறையைப் போலவே  ‘’ஹாலிகே’’ என்ற பறை கர்நாடகத்தில் இசைப் படுகிறது.
 

கேரளாவில் ‘’செண்டை’’, ‘’ துடி’’, ‘’இடக்கா’’ என்ற பறை வகைகள் நாட்டுப்புற இசை நடனங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
 

ராஜஸ்தானில் ‘’கேரோ’’, ‘’நிஸ்ஸான்’’ ,’’பாபுஜிகிமாதே’’ என்ற பறை வகைகள் உள்ளளன.
 

காஷ்மீரில் பெரிய கூம்பு வடிவிலான ‘’தும்பத்னாரி’’ என்ற  பறையும், கோவாவில் உடும்பு தோலால் ஆனா ‘’குமட’’ என்ற பறையும், அஸ்ஸாமில் ‘’கர்ரம்’’ என்ற ‘’மரப்பறை’’யும் பயன்படுத்தப் படுகிறது.
 

வங்காளத்தில் ‘’ஸ்ரீகோல்’’ , ஒரிசாவில் ‘’செங்கு’’, மணிப்பூரில் ‘’புல்’’ என்ற ‘’பறை’’ வகைகளையும் மக்கள் இசைத்து வருகின்றனர்.
 

இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் உள்ள சுமார் 427 பழங்குடியினக் குழுக்களில் 63 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஆடல், பாடல், செய்தித் தொடர்பு போன்றவற்றிற்கு ‘’பறை’’யைப் பயன்படுத்துகின்றனர்.
 

நக்கீரன்: ஒரு காலத்தில் முக்கியப்பட்டதாய் இருந்த பறை இசை தற்போது பின் தங்கிவிட்ட நிலையில் பறை இசை மீண்டும் அதன் உச்சத்தை எட்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? 
 

பிரபாகரன்: மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து இருந்த பறை இசை தற்போது பின் தங்கி விட்டது என்பது உண்மைதான். அது மீண்டும் உச்சம் பெரும் என்பதற்கு உதாரண மனிதராக இருப்பது பறை இசைக் கலைஞர் கத்தார் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக இயங்கி வரும் கத்தார் பறைமுழக்கம் விடுதலை சிந்தனை பரப்பி வருவது பறை இசை வரலாற்றில் ஒரு மைல்கல்.
 

 

 

தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நுண்கலைகளைப் பிரிந்து எங்கோ ஓர் உலகுக்குள் சென்று விட்டார்கள். அவர்களை பறை இசையின் மூலம் மீண்டும் அவர்களை மீது வந்து இசைக்குடிகளாக மாற்ற வேண்டும், பறை இசை இழந்த தன் உச்சத்தை தொட வேண்டும் என்ற நோக்கோடுதான் என் போன்ற பறை இசை கலைஞர்கள் இப்போது தீவிரப்படுகிறார்கள்.
 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல...
 

‘’இன்னும் செல்லாது பிறர் செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லி புயம் தட்டு –அட 
யானையின் மேல் வள்ளுவா சென்று நீ பறை 
கொட்டு கொட்டு கொட்டு.’’ – என்பதையும், 
அவரோட கண்மணித் திரளில்..
‘’நான்கு கோடி தமிழர் பட்டாளம் நாட்டை மீட்க கிளம்பிற்றுக் கண்டால்
தீங்கு செய்யும் வடவறின் ஆட்டம் செல்லாது என்று கொட்டு வெற்றிப்பறை.’’ -
என்பதுதான் எங்களின் முழக்கமாக இருக்கிறது’’ .
 

நக்கீரன்: சில காலங்களுக்கு முன்னால் பொதுவாக ‘’பறை இசை’’ என்பது சாதிய முத்திரையோடு பார்க்கப்பட்டது. இப்போது அதன் பார்வை மாறியிருக்கிறதா? 
 

பிரபாகரன்: ஆமாம். பறை என்பது தலித்களின் இசையாகவே பார்க்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் முற்றிலுமாக இல்லையென்றாலும் இப்போது அது மாறிக் கொண்டு வருகிறது. சாவுக்கு மட்டுமே அடிக்கப்படும் இசைதான் பறை என இருந்தது. இப்போது அவை மாறி, கல்யாணம், கல்லூரி விழாக்கள், அரசுப் பள்ளி விழாக்கள் என இப்போது பறை ஓசை கேட்கிறது. பறையடிக்கப்படும் போது பணக்காரர்களின் கால்கள் மெல்ல ஆடத் துவங்கியிருக்கிறது. 
 

 

 

பள்ளி, கல்லூரிகளின் அனைத்து சமுதாய மாணவர்களும் பறையடிக்க ஆர்வங்கொண்டு பயிற்சி எடுப்பதின் மூலம் பறை மேலான பார்வைக்கு வேறொரு கண்ணாடி போடப்படுகிறது. ஆனாலும் சில இடங்களில் அக்கண்ணாடியில் பசித்த வயிற்களோடு பரிதாபமாய் நிற்கும் மனிதர்கள் தெரிவதுதான் காலக் கொடுமை.

 

தன்னார்வ ஆர்வலரும், பறை இசைக்  கலைஞருமான ‘’பறை’’ இசைக் கலைஞர் மு.பிரபாகரனைப் பற்றி...
 

இலங்கையில் பிறந்தவர் இவர். 1980-ல் போடப்பட்ட சாஸ்திரி –ஸ்ரீமாவோ ஒப்பந்தப்படி பிராபகரனின் பெற்றோர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிற்கு இவரை கைக் குழந்தையாக தூக்கி வந்தனர். நீலகிரியில் குடியேறிய இவரின் பள்ளி, கல்லூரிக் காலங்கள் நீலகிரியிலேயே இருந்தன. தற்போது மனைவி, இரண்டு குழந்தைகளோடு கோவையில் உள்ளார்.

 

 

 

Next Story

பாடகி பவதாரிணி மறைவு; கலங்கி நிற்கும் திரையுலகினர்!

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
Singer Bavatarini  issue The film industry is worried

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

அதன் பின்னர் கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தின் மூலம் தமிழில் பாடல்கள் பாடத் துவங்கினார். அந்தப் படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலைப் பாடி அசத்தியது மட்டுமல்லாமல் முதல் பாடலிலேயே தனக்கென பல ரசிகர்களை உருவாக்கினார். இவ்வாறு, தமிழ் சினிமாவில் பல சிறப்பான பாடல்களைத் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களின் இசையிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் அழகாகப் பாடியிருக்கிறார். கேட்பவர்களை எல்லாம மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாகப் பின்னணி பாடகியாக மட்டுமே வலம் வந்த பவதாரிணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இசையமைக்கவும் தொடங்கினார். இவ்வாறு மொத்தம் 10 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து தன்னை ஒரு இசையமைப்பாளாராகவும் நிரூபித்துக் காட்டியவர்.

vck ad

இதனையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஆர். சபரிராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் பிரபல பத்திரிகையாளர் ராமச்சந்திரனின் மகன் ஆவார். கணவர், சபரிராஜ் சென்னையில் பிரபல விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், ஹோட்டல் பிசினசிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், இந்தத் தம்பதியருக்கு பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. ஆனாலும் இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தனர். பவதாரிணி, பாரதி என்ற திரைப்படத்தில் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

Singer Bavatarini  issue The film industry is worried

கடந்த 2002 ஆம் ஆண்டு ஆங்கிலப்படம் ஒன்றிற்கு இசை அமைத்து இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார் பவதாரிணி. பின்னர், 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அவுனா படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தியில் ஷில்பா ஷெட்டி நடித்த பிர்மிலேஜ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படியே பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வந்த பவதாரிணி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்திற்குப் பிறகு 3 படங்களுக்கு இசை அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்குள் இந்தக் குயில் பாட்டுக்கு சொந்தக்காரரை காலம் எடுத்துக்கொண்டது. இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது.

இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Singer Bavatarini  issue The film industry is worried

இந்தச் செய்தி தமிழ் திரையுலகத்தினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, இசைஞானி இலங்கையில் இருந்த காரணத்தால் இந்தத் தகவல் வெளியான உடனே, மகள் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அவரின் குடும்பாத்தார் அனைவரும் இலங்கை சென்றுள்ளனர். அங்கிருந்து 26 ஆம் தேதி மாலைக்குள் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு உடலை எடுத்து வருவார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். பிரபல பாடகி பவதாரிணி மறைந்த செய்தி திரைத்துறையினரை மட்டுமல்லாது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

- அருள் வைரா 

Next Story

'சிலோன் போலீஸ் உடை குறித்து கேள்வியெழுப்பிய உளவுத்துறை...' 'மேதகு' படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பகிரும் இயக்குநர் கிட்டு!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

kittu

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ‘மேதகு’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் கிட்டுவுடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். 

 

‘மேதகு’ படத்தின் பயணம் எங்கிருந்து தொடங்கியது?

 

‘மேதகு’ படத்தின் இறுதிக்காட்சியைத்தான் முதலில் ஒரு குறும்படமாக எடுத்திருந்தோம். ‘ரைஸ் ஆஃப் கரிகாலன்’ என்ற அந்தக் குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சுந்தர் தமிழன் என்பவர்தான் இதை எடுப்பதற்கு எங்களுக்கு முழு உந்துதலாக இருந்தார். அந்த வரவேற்பைத் தொடர்ந்து, இதை முழு நீள படமாக எப்படி எடுக்கலாம் என்று தஞ்சாவூரைச் சேர்ந்த குகன்குமாரும் சுமேஷ் குமாரும் என்னிடம் கேட்டனர். தலைவர் பிறப்பில் தொடங்கி ஆல்பர்ட் துரையப்பா கொலைவரை படமாக்கலாம் என்று யோசனை கூறினேன். அந்த யோசனை அவர்களுக்கும் பிடித்திருந்ததால் படத்தின் ஆரம்பகட்டப் பணிகளை உடனே துவங்கினோம்.

 

பிரபாகரன் பற்றிய படம் என்றால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. படம் ஆரம்பிக்கும்போது அது பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு இருந்ததா?

 

இந்தப் படத்திற்கு நிச்சயம் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காது என்பது இந்தப் படம் தொடங்கும்போதே எங்களுக்குத் தெரியும். அதனால் ஓடிடி தளத்திற்கான படமாகத்தான் இந்தப் படத்தை எடுத்தோம். சில ஓடிடி தளங்கள்கூட கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றச் சொன்னார்கள். உண்மை வரலாற்றை எடுப்பதால் அதைச் செய்ய நாங்கள் மறுத்துவிட்டோம். பிளாக் ஷீப் தளம்தான் எந்த மாற்றமுமின்றி படத்தை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

 

தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்தவரை எப்படி தேர்வு செய்தீர்கள்?

 

தம்பி குட்டிமணியை முதலில் துணை கதாபாத்திரத்திற்குத்தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம். பிரபாகரன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆட்கள் தேடிக்கொண்டிருக்கையில் தம்பி குட்டிமணி அக்கதாபத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் அவர் நிறைய தாடி வைத்திருந்தார். அதை ஷேவ் செய்துவிட்டு பார்க்கையில் தலைவர் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருத்தமானவராக இருந்தார்.

 

படம் உருவாக்கலில் இருந்த பொருளாதாரச் சிக்கல்கள் என்னென்ன?

 

இந்த மாதிரி ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று அறிவித்து உலகத் தமிழர்களிடம் நிதியுதவி கோரினோம். அமெரிக்காவில் இருந்து ஒரு குழு எங்களுக்காக வேலை பார்த்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம், அமீரகத்திலிருந்தும் நிறைய உதவிகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் படத்தின் பட்ஜெட் நாங்கள் நினைத்ததைவிட அதிகமாகச் சென்றுவிட்டது. வேறு வழியில்லாமல் 15 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி படத்தைத் தொடர்ந்தோம். அந்த நேரத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரமேஷ் அண்ணன், ‘வட்டிக்கெல்லாம் எதற்குப் பணம் வாங்குகிறீர்கள்... நான் தருகிறேன் என்று கூறி நிதியுதவி அளித்தார். இது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் முயற்சியால் உருவான படம். 

 

படமாக்கலின்போது இருந்த நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?

 

ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் எனத் திட்டமிட்டு அங்கு செல்வோம். அங்கு உளவுத்துறை ஆட்கள் நின்றுகொண்டிருப்பார்கள். அதனால் உடனே வேறு இடத்திற்குப் படப்பிடிப்பை மாற்ற வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டது. யாழ் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு கலவரக்காட்சி படமாக்கும்போது சுற்றி உளவுத்துறை ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள். போலீஸ் உடையணிந்திருக்கிறார்கள்... அதுவும் சிலோன் போலீஸ் உடையணிந்திருக்கிறார்கள்... என்ன காட்சி எடுக்கிறீர்கள் என்றெல்லாம் படப்பிடிப்பில் குறுக்கிட்டனர். அவர்களுக்கு அனைத்தையும் எடுத்துச் சொல்லித்தான் படப்பிடிப்பு நடத்தினோம். உளவுத்துறை ஆட்களுக்கு மத்தியில்தான் இந்தப் படமே எடுக்கப்பட்டது. 

 

பிரபாகரன் குறித்து நிறைய விமர்சனங்கள், அவதூறுகள் தற்போது பரப்பப்படுகின்றன. இந்த நேரத்தில் ‘மேதகு’ படத்தின் முக்கியத்துவம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

 

இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நாம் ஒரு படத்தை எடுத்து வைப்போம் என்று நினைத்தெல்லாம் நாங்கள் ‘மேதகு’ படத்தை எடுக்கவில்லை. இது 2020ஆம் ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய படம். அந்தச் சமயத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கடந்த மே 22ஆம் தேதி மீண்டும் ரிலீஸுக்குத் திட்டமிட்டிருந்தோம். அதுவும் தள்ளிப்போனது. ‘ஜகமே தந்திரம்’ படத்திற்குப் பிறகு நம்முடைய படம் வெளியாகிறது. ‘ஃபேமிலி மேன்’, ‘ஜகமே தந்திரம்’ என நிறைய பேருக்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு... அதனால் கொஞ்சம் பொறு என்று தேசியத்தலைவர் நினைத்ததாகவே அந்த இருமுறை ரிலீஸ் ரத்து குறித்து நான் நினைக்கிறேன்.