Skip to main content

ஐயா ஜாலி பனி கொட்டுது, அட்ரா குட்டிக்கரணத்தை... பாண்டாக்களின் சேட்டைகள் (படங்கள்)

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

 

 

 

பல நாடுகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களும் உறைநிலைக்கு கீழே செல்லத் தொடங்கியுள்ளது. மனிதர்களால் அதிகம் விரும்பப்படக்கூடிய விலங்கான பாண்டாக்களுக்கு பனிக்காலம் மிகவும் பிடிக்கும். இதனால் அவை மகிழ்ச்சியாக உள்ளன. இந்தப் படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

 

 

 

Next Story

 ‘ஸ்மைல் ப்ளீஸ்’ - புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்த முதல்வர்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

Chief Stalin who photographed the photographer

 

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சிறந்த புகைப்படங்களுக்கு பாராட்டுக்களும், விருதுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றனர். சிலர் தனக்குப் பிடித்தவற்றைப் புகைப்படமாக எடுத்து உலக புகைப்பட தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் புகைப்பட கலைஞர்களுக்குப் பலரும் நேரிலோ அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்து தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மேலும் அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

'மு.க.ஸ்டாலின் தொடர்பான புகைப்படக் கண்காட்சி' - தொடங்கி வைத்துப் பார்வையிட்ட கமல்ஹாசன்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Kamal Haasan inaugurated 'photo exhibition related to M.K.Stalin'

 

சென்னை பாரிமுனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

 

திமுகவின் வடசென்னை மாவட்டம் சார்பாக அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை பயணத்தை வெளிக்காட்டும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.