
பாகிஸ்தான் படையினர் திடீரென எல்லை மீறி வந்து ஷெல் குண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதல் காலை 7:45 மணிக்கு ஆரம்பித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள "பூஞ்ச்" கிராமத்தில் பாகிஸ்தான் இராணுவ படையினர் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுவும் எல்லைமீறி உள்ளே வந்து இந்திய இராணுவ படையினை தாக்கி வருகின்றனர். இந்திய இராணுவப்படையும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
கடைசியாக கிடைத்த தகவலின்படி, இரண்டு இராணுவ படையும் ஷெல் தாக்குதல் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஒரு உடனடி தகவல்களும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் எல்லை மீறியும், சர்வதேச எல்லை தாண்டியும் வந்து திடீரென நடத்தும் தாக்குதலினால் 21 இராணுவ வீரர்களும், 12 பாதுகாப்பு ஊழியர்களும் பலியாகியுள்ளனர்.