Published on 23/10/2018 | Edited on 23/10/2018
சீனாவில் பெண் ஒருவர் ஒருவார விடுமுறையில் இருந்துள்ளார். அப்போது அவர் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுக்க செல்போனை பயன்படுத்திக்கொண்டே இருந்துள்ளார். நாளாக, நாளாக அவரது கைகளில் வலிகள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து அவரது கைகள் செல்போன் பயன்படுத்தும் நிலையிலேயே நின்றுவிட்டது. அவரால் கைவிரல்களை அசைக்கமுடியவில்லை.
இதன்பின் மருத்துவரை அணுகியபோதுதான் அவருக்கு தெரிந்தது, அவருக்கு டெனோசைனோவிடிஸ் (தசைநார் சுற்றியுள்ள திரவம் நிரப்பப்பட்ட உறை அழற்சி) ஏற்பட்டுள்ளது என்று. ஒரே வேலையை மீண்டும், மீண்டும் செய்யும்போது இந்த நோய் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல அவரை குணப்படுத்திவிட்டார் மருத்துவர். இன்றைய சூழலில் செல்போன் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் எதையும் அளவுடன் பயன்படுத்தினால் நல்லது. அளவு மீறும்போதுதான் அது ஆபத்தாகிறது.