Skip to main content

ஸ்கெட்ச் போட்ட கே.எஸ்.அழகிரி... நடுக்கத்தில் நிர்வாகிகள்... 

Published on 04/10/2019 | Edited on 04/10/2019
k s azhagiri



நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், நாங்குநேரி ஏற்கனவே காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் அந்த தொகுதியை அக்கட்சிக்கே ஒதுக்கியது திமுக. 
 

இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று ரூபி மனோகரன் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற முயலும். இதனால் காங்கிரஸ் கட்சியினர் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி. 


 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த சொன்னபோது, பலர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கே.எஸ்.அழகிரியின் உத்தரவுக்கு யாரும் மதிக்கவில்லை. அலட்சியம் செய்துவிட்டனர். காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கோஷ்டிகள் இருப்பதால் அனைவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அக்கட்சியினரே கூறுகின்றனர்.
 

ஆனால் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று கூறும் கே.எஸ்.அழகிரி, முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பி.க்கள், மாவட்டத் தலைவர்கள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் அனைவரும் நாங்குநேரி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற வேண்டும். வெற்றிக்காக உழைக்க வேண்டும். நமது வேட்பாளருக்காக திமுகவினர் தொகுதியில் முகாமிட்டு உழைக்கும்போது, நாம் அங்கு அதைவிட இரண்டு மடங்கு உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.


 

மேலும் தனக்கு வேண்டியவர்களை வைத்து, நாங்குநேரி தேர்தல் பணியில் ஈடுபடாதவர்களை கணக்கு எடுக்கும் பணியையும் ரகசியமாக தொடங்கியுள்ளாராம். தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் பணியில் அக்கறை காட்டாதவர்களின் பட்டியலை டெல்லிக்கு அனுப்பி, அவர்களின் கட்சி பதவிகளுக்கு வேட்டு வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம் கே.எஸ்.அழகிரி.
 

மாநிலத் தலைவரின் இந்த திட்டத்தை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.