Skip to main content

பொதுமேடையில் அத்வானியை அலட்சியம் செய்த மோடி

Published on 10/03/2018 | Edited on 10/03/2018

திரிபுராவில்,  முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மூத்த தலைவரான அத்வானியை அலட்சியம் செய்த காணொளி வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

திரிபுராவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் இருபத்தைந்து வருட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து பா.ஜ .க. வெற்றிபெற்றது.

 

modi


அதைத் தொடர்ந்து, நேற்று முதல்வர் பதவியேற்பு விழா  நடைபெற்றது. விழாவில் பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு பிப்லாப் தேப் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். 

அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் போன்றோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், அந்த நிகழ்வின் ஆரம்பத்தில் அனைத்து தலைவர்களும், மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வணக்கத்தை தெரிவித்தனர்.

எல்லா கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்கள் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கம் செலுத்தினார்  மோடி. ஆனால் மூத்த தலைவரான அத்வானி வணக்கம் செலுத்தும்போது பாராமுகமாக இருந்துகொண்டார். இதனால் அத்வானி முகம்  வாடிப்போனது. அந்த காணொளி  வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

 

modi

 

"குஜராத் தேர்தலின் போது நடந்த பா.ஜ.க. பிரச்சாரக்கூட்டத்தில் அத்வானி அவர்களுக்கு அருகில் நின்று மைக் பிடித்தவர் மோடி. ஆனால் இன்று இப்படி நடந்துகொள்ளும் அவருடைய இந்த போக்கு கண்டிக்கதக்கது" என உட்கட்சியிலேயே பெரும்விமர்சனத்தையும், சர்ச்சையையும்  ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.