தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேட்டு!
அடுத்தது ஃபயர் ஒர்க்ஸ். சைனாவில் அதிகமாக பட்டாசு உற்பத்தி நடக்கிறது. அதை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்குத் தடை இருக்கிறது. தடையை நீக்கி விடுங்கள் என்று சீனா தரப்பில் கேட்க வாய்ப்பு இருக்கிறது. அந்தத் தடையை நீக்கி விட்டு சீனா பசுமை பட்டாசு என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். உலக அளவில் 80 சதவீதம் பட்டாசு உற்பத்தி செய்வது சைனாதான். சிவகாசியில் தயாரிப்பது க்ரீன் ஃபயர் ஒர்க்ஸ் கிடையாது. இது காற்றை மாசுபடுத்துதுன்னு அமைச்சரெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. இதெல்லாம் தவறான தகவல். காற்று மாசுபாடுக்கு காரணம் வாகனங்களும் தொழிற்சாலைகளும்தான். உலகத்திலுள்ள அத்தனை நாடுகளிலும் சைனா பட்டாசுகளை வருடத்துக்கு 10 தடவை வெடிக்கிறாங்க. அது விண்வெளியை நிரப்புகிறது. அங்கெல்லாம் எதுவும் ஆகவில்லை. இந்தியாவில் ஒரே ஒரு தீபாவளி நாளில்தான் பட்டாசு வெடிக்கிறோம். அந்தக் கொண்டாட்டத்தையும் ஒழிப்பதற்கான வேலை நடக்கிறது. இனி, சைனா பட்டாசுகள் கிரீன் பட்டாசு என்ற பேரில் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பிரதமரின் வாதம் வலிமையானதா?
எலக்ட்ரானிக் பொருட்களைத்தான் நாம் அதிகமாக இறக்குமதி செய்கிறோம். 0% ட்யூட்டிங்கிறதால அதிகமாக இறக்குமதி பண்ண முடியும். அதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக இருக்கின்றன. இன்றைக்கு trade deficit 63-லிருந்து 70 பில்லியன் டாலர் வரை வந்துவிட்டது. அடுத்து 100 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடக்கும் போது trade deficit அதிகமாக அதிகமாக, 10 பில்லியன் டாலர்தான் நாம் ஏற்றுமதி பண்ணுவோம் என்ற நிலைமையை மாற்றி நமது பிரதமர் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் சைனாவுக்குமான வர்த்தகத்தை 200 பில்லியனாக்குவோம். 100 பில்லியன் நாங்க ஏற்றுமதி பண்ணுவோம். 100 பில்லியன் உங்ககிட்ட இருந்து இறக்குமதி பண்ணுவோம் என்று சொல்லக்கூடிய ஒரு வலிமையான வாதத்தை பிரதமர் மோடி வைத்திருந்தார் என்றால், அடுத்த 10 ஆண்டுகளில் சைனாவைப் போல நாங்களும் வளர்ந்து காண்பிப்போம் என்ற நிலையில், இந்தியாவும் சைனாவும் ஒரே மட்டத்திலிருந்து கை கொடுக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும். இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவுகள்தான் அதை நமக்குத் தெரிவிக்கும்.
இரு நாடுகளும் சரிசமமா?
நாம் எதை வைத்து அவர்களிடம் சமமாகப் பேச முடியும்? மாமல்லபுரம் குறித்துப் பேசலாம். சைனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பழங்கால தொடர்பு பற்றி பேசலாம். கலாச்சார ரீதியாக ஒன்றாக இருக்கிறோம் என்று பேசலாம். போட்டோ எடுத்துக்கொள்ளலாம். டான்ஸ் பார்க்கலாம். கலாச்சார நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம். போதி தர்மர் நாங்கள்தான் என்று சொல்லிக்கொள்ளலாம். இதுபோன்ற பழங்கதைகளைப் பேசலாம். இதுபோன்ற பேச்சுவார்த்தை, ஒரு புரிதலை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்குமிடையே மறைமுகமாக போர் ஏற்படக்கூடிய சூழலைத் தவிர்த்து, இரண்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளை உட்காரவைத்துப் பேசக்கூடிய சுமுகமான நிலையை ஏற்படுத்தி, அடுத்த லெவல் டிஸ்கசனுக்கு இது ஒரு அடிப்படையாக அமையும். அவ்வளவுதான். மற்றபடி சைனாவுக்கு சரிசமமாக நின்று கைகொடுக்க முடியாது. எப்போது energy-யில் independence-ல் நாம achieve பண்ணப்போகிறோம்? Energy Security குறித்து இந்தியா பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், 2030-ல் Energy Independence achive பண்ணுவோம் என்று கலாம் கூறினார். அதை அடைந்துவிட்டால் சைனாவுக்குச் சமமாக நாம் வரமுடியும். Ever Green Revolution என்று அப்துல் கலாம் சொன்னார். அதை இந்திய அரசு கடைப்பிடித்தால் சைனாவுக்கு இணையாக நாம் வர முடியும்.
இதை எப்படி சொல்ல முடியும்?
2000 கிலோமீட்டர் நதிகளை சைனா இணைத்துவிட்டது. நாங்களும் இந்தியாவில் நதிகளை இணைப்போம். அதிகளவில் நீர்வழிச்சாலைகளை உருவாக்குவோம். முப்போகம் விளைவிப்போம் என்று சொன்னால், சைனாவும் இந்தியாவும் சமமாகக் கை குலுக்கலாம். நாங்கள் 90% informal sector –ஐ ஒழித்துவிட்டோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக 10% formal sector-ஐயும் ஜி.எஸ்.டி மூலமாக ஒழித்துவிட்டோம். இதை சைனாவிடம் சொல்ல முடியுமா? இத்தனை லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? 30 ஆண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்த சைனாவையும் நாங்கள் manufacturing hub ஆக மாற்றுவோம் என்று சொல்லி, 30 ஆண்டுகளில் அப்படி உருவாக்கி, இன்றைக்கு அத்தனை நாடுகளுக்கும் சவால் விட்டு கொண்டிருக்கின்ற சைனாவிடம் போய் நாங்கள் எல்லாவற்றையும் ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியுமா?
போனது போகட்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு நாங்கள் மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்குவோம். எங்கள் நாட்டில் உருவாகும் அத்தனை பொறியாளர்களுக்கும் industry 5.0 லெவலில் நாங்கள் engineering skil-ஐ உருவாக்குவோம். அதற்குத் தகுந்த தரமான கல்வியை நாங்கள் அளிப்போம். அடுத்த 10 ஆண்டுகளில், நாங்கள் 100 மில்லியன் டாலர் அளவுக்கு டிரேட் பாலன்ஸ் ஜீரோ என்ற நிலைமைக்கு இந்தியாவை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இந்திய பிரதமர், சைனா அதிபரிடம் சொல்லி கை கொடுத்திருப்பாரா என்பது இருவரும் தருகின்ற ஸ்டேட்மென்டில் தெரியும்.
முந்தைய பகுதி:
சீனா எங்கே? இந்தியா எங்கே? தனிமைப்படுத்திய தந்திரம்!- பகுதி: #2