Skip to main content

வாக்காளப் பெருமக்களே...

Published on 26/01/2018 | Edited on 26/01/2018
வாக்காளப் பெருமக்களே...

உங்களைப்  பற்றிய சுவாரசிய தகவல்கள்! 





இந்தியா முழுவதும் இன்று (25 ஜனவரி) தேசிய வாக்காளர்கள்  தினம் கடைபிடிக்கப்பட்டது. தேசிய வாக்காளர்கள்  தினம், 2011 ஆம்  ஆண்டு ஜனவரி  25 ஆம் தேதி  முதல் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் தேர்தல்  அக்டோபர் 25 ஆம் தேதி 1951 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் 1874 வேட்பாளர்களும் 53 கட்சிகளும் போட்டியிட்டனர் இந்த தேர்தலில் 489 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றிபெற்று இந்தியாவின்  முதல் பிரதமராக ஜவஹர் லால்  நேரு பதவியேற்றார். இந்தியாவில் அப்போது இருந்த 36 கோடி மக்கள் தொகையில் 17.32 கோடி மக்கள் வாக்களிக்கத்   தகுதியானவர்களாக இருந்தனர் . 

  தேர்தலில்  வாக்களிக்க 21 வயது நிரப்பியிருக்க வேண்டும் என்று இருந்ததை மாற்றி அரசியலமைப்பு சட்டம் 326 யில் 61வது  சட்ட திருத்தம் கொண்டுவந்து 18 வயதாகக் குறைத்து 1988 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தியின் ஆட்சி காலத்தில் லோக் சபாவில் சட்டமாக ஏற்றப்பட்டது. பின்னர் மார்ச் 28 1989 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது .

இந்தியாவில் முதன் முதலில்  வாக்களித்தவர் என்ற பெருமைக்குரியவர்  ஹிமாச்சல பிரதேசத்தைச்  சேர்ந்த ஷியாம் சரண் நிகி என்பவர் தான். 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் கின்னெளர் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார். தற்போது தனது 100வது வயதில் கடந்த ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன் மனைவியுடன் வந்து  வாக்களித்துள்ளார் .

இந்தியாவிலே அதிக முறை தேர்தலில் நின்று கின்னஸ் சாதனை படைத்தவர் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்.பத்மராஜன்  இவர் 169 முறை தேர்தலில் போயிட்டுள்ளார். இவர் கடைசியாக போடியிட்ட தொகுதி ஆர்.கே.நகர். இதுவரை தேர்தலில் போட்டியிட இவர் கட்டிய டெபாசிட் பணமே இருபது லட்சத்திற்கு மேல். இவர் "எலெக்க்ஷன் கிங்" என்றும் அழைக்கப்படுகிறார் .





இந்தியாவில் முதல் முதலில் மின்னணு வாக்களிக்கும் இயந்திரம் 1989 ஆண்டு முதல் 1990 வரை உருவாக்கப்பட்டு பின்னர் 16 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. மத்திய பிரதேசில் ஐந்து இடங்கள், ராஜஸ்தானில் ஐந்து இடங்கள் ,டெல்லியில் ஆறு இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த இயந்திரத்தை உருவாக்கிய குழுவுக்கு தலைவராக இருந்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. 

           
இந்தியாவில் தற்போது  மொத்தம் ஆண் மற்றும் பெண் வாக்களர்கள் 814.5 மில்லியன் பேரும்  28,314 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் .

  இந்தியாவில் அதிக சதவீதம் வாக்கு பதிவான மாநிலம் திரிபுரா. இதற்கு முன்பு  2008 ஆம் ஆண்டு தேர்தலின் போது  92 % வாக்குகள் பதிவானதே திரிபுராவில்  சாதனையாக இருந்தது. அதனை முறியடிக்கும் வகையில்  2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  93% வாக்குப்பதிவாகி அந்த  சாதனையை முறியடித்தது. மிகவும் குறைவான வாக்குப்பதிவு அடைந்த மாநிலம் ஜம்மு -காஷ்மீர் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் 7.8% சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.






  இந்தியாவில் ஒரே ஒரு வாக்காளர் மட்டும் வாக்களிக்கும் வாக்குச்சாவடி ஒன்று உள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர் வனப்பகுதியில்  பானெஜ்  என்னும் இடத்தில் அமைக்கப்படும் அந்த வாக்குச்சாவடியில்  மஹன்த்  பாரத் தாஸ் தர்ஷன்தாஸ் என்பவர் மட்டும் தான் வாக்களிக்கிறார். 

ஹரிஹரசுதன் 

சார்ந்த செய்திகள்