Published on 27/09/2018 | Edited on 27/09/2018
உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளில் வாழும் மக்களிடம் அவர்களின் மிகப்பெரிய கவலை எது என்று கோல்கீப்பர்ஸ் குளோபல் யூத் அவுட்லுக் எடுத்த சர்வேயில் கேட்கப்பட்டது.
மொத்தம் 40 ஆயிரம் கேட்கப்பட்ட 40 ஆயிரம் பேரில் 2800 பேர் இந்தியர்கள். இந்த சர்வேயில் இந்தியர்களின் மிகப்பெரிய கவலை வேலையில்லாத் திண்டாட்டம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவைப் போலவே நைஜீரியாவிலும் இதே பிரச்சனைதான் மிகப்பெரிய கவலை என்று கூறியிருக்கிறார்கள். பல நாடுகளில் பாதுகாப்பின்மையும், பொருளாதார நிலையற்ற தன்மையும், சுற்றுச்சூழலும், ஊழலும் மிகப்பெரிய பிரச்சனையாக கூறியிருக்கிறார்கள்.
இந்தச் சர்வேயைப் பார்த்ததும் மோடி என்ன சொல்வார்? ஒருவேளை, அவர் சொன்ன பக்கோடா விற்கும் தொழிலை வேலைவாய்ப்பாக கருதியிருந்தால் இந்தக் கவலை குறைந்திருக்கும் என்பாரோ..!