இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக கலவரங்கள் தொடர்ந்து வரும் மணிப்பூர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நடத்துகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பால்கி நமக்கு தெரிவித்ததாவது...
மணிப்பூர் விவகாரம் அமெரிக்காவில் எதிரொலித்ததா?
ஒரு மாநிலத்தில் 51 நாட்களுக்கு மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரத்தை தன்னால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த வெளியுறவு இணை அமைச்சர் கூறிய செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியானது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில், ஆயுதம் தாங்கிய ஏனைய மணிப்பூர் குழுக்களை தவிர ஏனைய கட்சிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் அமித்ஷா பேச்சை பாஜகவினுடைய மணிப்பூர் முதல்வர் ஒப்புகொண்டுவிட்டு குக்கி இன மக்களை தேச விரோதிகளாக பேசி அந்த பகுதியில் இருக்க கூடிய மக்களுக்குள் இன வேற்றுமையை அதிகப்படுத்தியிருக்கிறார். இதனால் இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் நடக்கக்கூடிய சண்டையில் கிறிஸ்துவர்களை மிகப் பெரிய அளவிற்கு அச்சமூட்டும் வகையில் இந்த 51 நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமையல் பொருளாக இருக்கக்கூடிய கசகசா மணிப்பூரில் பல்லாயிரல்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்பட்டு வருகிறது. அந்த கசகசாவில் இருக்கக் கூடிய பூ, போதை பொருளுக்கு பயன்படகூடியதால் தீவரவாத கூட்டம் அங்கு அதிகமாக நடமாடுவார்கள். 2019 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநில ஆலோசனை கூட்டத்தில் வடகிழக்கு மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போவோம் என்று பாஜகவினர் கூறினார்கள்.
பாஜக ஆட்சியில் அது நடக்கவில்லை என்ற கோபம் தான் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், குக்கி எனும் பட்டியல் இன மக்களுக்கு எதிராக மெயிட்டி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து கேட்டு போராடி வருகிறார்கள். அதை தீவரவாத குழுக்களோடு ஆலோசனை கூட்டம் நடத்தி அங்கு மிக பெரிய கலவரத்தை ஏற்படுத்தியவர்களே பாஜகவினர் தான். இந்த கலவரத்தில் 60,000 மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். 7000 வீடுகள் தீயில் பற்றி எரிந்திருக்கிறது.
அங்கு மெயிட்டி இன மக்கள் குக்கி இன மக்களைத் தாக்குகிறார்கள். அது மட்டுமல்லாமல் குக்கி பகுதியில் இருக்கக்கூடிய மிகப் பெரிய 25 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படி மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது இதை பற்றி கவலைப்படாமல் ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் உலக சாதனை நிகழ்த்தப்பட வேண்டும் என்ற அதிசயம் மோடி ஆட்சியில் தான் நடந்திருக்கிறது. நாமெல்லாம் நீரவ் மன்னன் பிடில் வாசித்ததை சொற்களால் தான் கேள்வி பட்டிருக்கிறோம். அதை இப்போது தான் நேரில் பார்க்கின்றோம். மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கும் போது யோகாசனம் என்ற பிடிலை வாசித்த பாசிச நீரவ் மன்னன் தான் மோடி என்று டெல்லி வீதியில் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.
டெல்லியில் 11 எதிர்க்கட்சிகள் மோடியைப் பார்க்க நேரம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு நேரம் கொடுக்கவில்லை. பாஜக அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் அதை அரசியலாக பார்க்கிறது.
கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாரே?
ஏற்கனவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் குக்கி இன மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். மேலும் மெயிட்டி இன மக்களுக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுத்ததால் ஏற்பட்ட பதட்ட நிலையை எங்களால் சரி செய்யப்படும் என்று அமித்ஷா உறுதிமொழியளித்தார். ஆனால், அமித்ஷா கூறிய ஆறே நாளில் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்த 4000 துப்பாக்கிகள் காணாமல் போனது. அந்த காணாமல் துப்பாக்கிகளின் நிலவரத்தை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்பது எல்லாம் பற்றி எரிந்து முடிந்த பிறகு நிவாரணம் தருகிறேன் என்று சில அரசு அதிகாரிகள் சொல்வார்கள். அது போல் இருக்கிறது. அங்கு உள்ள மக்கள் தங்களது சொத்தை விட்டு, அகதிகளாக வேறு இடத்திற்கு சென்றிருக்கிறார்கள். அவர்களைத் தேடி கண்டுபிடிப்பதை விட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவது என்பது காலம் கடந்த முயற்சி. இதன் மூலம் இந்த மோசமான அணுகுமுறைக்கு சொந்தக்காரர் அமித்ஷா தான். இந்த கலவரத்துக்கு முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தான். அவர், குக்கி இன மக்களை பழி வாங்க வேண்டும் என்று நினைத்துச் செய்யக்கூடிய அட்டூழியங்கள் தான் இவையெல்லாம்.
பிரதமர் நாட்டிலேயே இல்லாத நேரத்தில் இந்த ஆலோசனை கூட்டம் தேவையா என்று ராகுல் காந்தி கூறுகிறாரே?
கடந்த 18 மற்றும் 19 தேதிகளில் நடக்கவிருக்கும் கூட்டம் தான் இப்போது நடக்க இருக்கிறது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முழு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று மணிப்பூரை சார்ந்த எதிர்க்கட்சிகள் கூறிவிட்டார்கள். அதன்பின்பு அதிகாரிகள் துணைகொண்டு அவர்களை சமாதானம் செய்து அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார்கள். பாதிப்பு ஒரு பக்கம் அதிகமாக இருப்பதால் அந்த சமாதான பேச்சுவார்த்தை அவ்வளவு எளிதாக நடக்காது.
அந்த காலம் கடந்த பேச்சு வார்த்தையை தான் மோடி இந்தியா வந்ததற்கு பின்பு நடத்தலாம் என்று இருந்தார்கள். ஆனால், அங்கு மோடி உலக சாதனை செய்ததை விமர்சனத்துக்கு வரும் அச்சத்தால் அமித்ஷாவை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மணிப்பூரில் மோசமான நிர்வாகத்தை மேற்கொண்ட அந்த மாநில முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 11 கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அமைச்சர்கள் தலையிட வேண்டிய விசயத்தில் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறிருக்கிறாரே?
மணிப்பூர் கலவரத்திற்கு முன்பு எஸ்.டி சலுகை அந்தஸ்து அறிவிப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் கொடுக்க கூடாது என்று அனைத்து கட்சிகளும் கூறினார்கள். ஆனால், அமித்ஷா மணிப்பூர் மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றினார். அதற்கு ஆதரவு தந்தவர் மோடி. இவர்கள் இரண்டு பேர் தான் இந்த குற்றத்தை முதலில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், இவர்கள் இரண்டு பேரும் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் அங்குள்ள மக்கள் திருப்தி ஆவார்கள்.
மூன்று வருடத்திற்கு முன்பு இதே மணிப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு மோடி கலந்து கொண்டு அங்குள்ள நாட்டுப்புற இசைக்கருவிகளை அவர்களோடு இசைத்திருந்தார். இப்படி அமைதியாக இருந்த மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது வராமல் இருப்பது எந்த மக்கள் ஏற்று கொள்வார்கள். அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்தினாலும் அதை செயல்படுத்த அமித்ஷாவும் மோடியும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆகவே, மத்திய அரசின் உயரிய பதவியில் இருக்கக் கூடிய இவர்கள் இரண்டு பேர் சேர்ந்து பேசினால் அங்கு அமைதி நிலவும்.
முழு பேட்டி வீடியோவாக: