பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்டியல்.
மத்திய அமைச்சர்கள் "Cabinet Ministers".
1. நரேந்திரமோடி.
2. ராஜ்நாத் சிங்.
3. அமித்ஷா.
4. நிதின் கட்கரி.
5. டி.வி. சதானந்த கவுடா.
6. நிர்மலா சீத்தாராமன்.
7. ராம்விலாஸ் பாஸ்வான்.
8. நரேந்திர சிங் தோமர்.
9. ரவி சங்கர் பிரசாத்.
10. ஹர்சிம்ராட் கவுர் பாடல்.
11. தாவார் சந்த் கெலட்.
12. எஸ். ஜெய்சங்கர்.
13. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்.
14. அர்ஜூன் முண்டா.
15. ஸ்மிரிதி இரானி.
16. டாக்டர். ஹர்ஷ்வர்தன்.
17. பிரகாஷ் ஜவடேகர்.
18. பியூஸ் கோயல்.
19. தர்மேந்திர பிரதான்.
20. முக்தர் அப்பாஸ் நக்வி.
21. ப்ரால்ஹாட் ஜோஷி.
22. மஹேந்தரநாத் பாண்டே .
23. அர்விந்த் சாவந்த்.
24. கிரிராஜ் சிங்.
25. கஜேந்திர சிங் ஷெகாவத்.
மத்திய இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) "Minister of state with Independent Charge".
1. சந்தோஷ் குமார் கங்வார்.
2. ராவ் இந்திரஜித் சிங்.
3. ஶ்ரீபாத் நாயக்.
4. ஜிதேந்திர சிங்.
5. கிரண் ரிஜிஜூ.
6. ப்ரஹ்லாத் சிங் படேல்
7. ஆர்.கே. சிங்.
8. ஹர்தீப் சிங் பூரி.
9. மன்சூக் எல் மாண்டவியா.
மத்திய இணையமைச்சர்கள் "Minister Of State".
1. ஃபாக்கான் சிங் குலாஸ்த்.
2. அஸ்வினி குமார் சௌபே.
3. அர்ஜூன் ராம் மெக்வால்.
4. வி.கே. சிங்.
5. கிரிஷான் பால்.
6. ராவோசேப் டேன்வ்.
7. ஜி. கிஷான் ரெட்டி.
8. பர்ஷோத்தம் ரூபலா.
9. ராம்தாஸ் அத்வாலே.
10. சாத்வி நிரன்ஞன் ஜோதி.
11. பாபுல் சுப்ரியோ.
12. சஞ்ஜீவ் பால்யான்.
13. சஞ்ஜய் சாம்ரோ டோத்ரே.
14. அனுராக் தாகூர்.
15. சுரேஷ் அங்காடி.
16. நித்யானந்த் ராய்.
17. ரட்டன் லால் கடரியா.
18. வி. முரளிதரன்.
19. ரேணுகா சிங் சர்குஜா.
20. சோம் பிரகாஷ்.
21. ரமேஷ்வர் டேலி.
22. பிரதாப் சந்திரா சரங்கி.
23. கைலாஷ் செளத்ரி.
24. திபா ஶ்ரீ செளத்ரி.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறாத முன்னால் மத்திய அமைச்சர்கள் பட்டியல்.
1. பொன்.ராதாகிருஷ்ணன்.
2. மேனகா காந்தி.
3. சுரேஷ் பிரபு.
4. அல்போன்ஸ்.
5. ராதாமோகன் சிங்
உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களுக்கும், புதியதாக தேர்ந்தெடுக்க எம்பிக்களுக்கு பிரதமர் தனது அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கினார்.
இரண்டாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக நேற்று பதவியேற்று கொண்டார். இவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்பட 25 எம்பிக்கள் கேபினட் அமைச்சர்களாகவும், மத்திய இணையமைச்சர்களாக அனுராக் தாகூர், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட 24 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) கிரண் ரிஜிஜூ, வி.கே. சிங் உள்ளிட்ட 9 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் அமைச்சரவையில் பிரதமர் உட்பட மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்பிக்களுக்கு மத்திய அமைச்சரவையில் பிரதமர் இடம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனா கட்சி மற்றும் லோக் ஜனசக்தி கட்சி , இந்திய குடியரசுக்கட்சி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட நான்கு கட்சிகளுக்கு மட்டுமே அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் நான்கு இடங்கள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு பாஜக வழங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டவர்களுக்குகான இலாக்காகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் நீடிப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு அமித்ஷாவிற்கு வழங்கப்படும் எனவும், இந்திய வெளியுறவுத்துறை முன்னால் செயலாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான எஸ்.ஜெய்சங்கர் நேற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு மத்திய வெளியுறவுத்துறை பொறுப்பு வழங்க அதிக வாய்ப்பு உள்ளது.
கேபினட் அமைச்சரவையில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் பாஜக எம்பிக்கள் 10 பேர் இடம் பிடித்துள்ளனர். அதே போல் மத்திய அமைச்சரவையில் 20 புதுமுகங்களுக்கு வாய்ப்பு. பதவியேற்பு விழா நிறைவடைந்ததுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் குடியரசுத்தலைவருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த விழாவில் தொழில் அதிபர்கள் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி உட்பட பலர் பங்கேற்றனர்.