சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்தான் ரொம்ப அறிவுப்பூர்வமானது என்றும், அந்த பாடத்திட்டத்துக்கு மாறினால் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று சில புத்திசாலிகள் கூறினார்கள்.
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் சமச்சீர் பள்ளிகளாக உருமாற்றியவுடன், சி.பி.எஸ்.இ. என்று பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டன.
மத்திய கல்வித்திட்டம் என்னவோ ரொம்ப அறிவார்ந்த திட்டம் போல ஒரு இமேஜை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அது எவ்வளவு கேவலமான பழமைவாத கல்வியை புகுத்துகிறது என்பதை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான கேள்வித்தாள் அம்பலப்படுத்துகிறது.
வரலாறு தொடர்பான கேள்வித்தாளில் ஒரு கேள்வி, நான்கு வர்ணங்களில் எந்தச் சாதி கீழான சாதி என்று இடம்பெற்றிருக்கிறது. அதற்கான பதிலாக, பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களிடம் வர்ணாச்சிரம அநீதியை இன்றும் வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதை அறியும்போது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது.
இத்தகைய பாடத்திட்டத்தை தமிழக அரசு இனியும் அனுமதிக்கலாமா என்று கல்வியாளர்கள் வினா எழுப்பி உள்ளனர்.