மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பாஜகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
திமுகவின் ஊழல் பட்டியலை எங்களுடைய தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. அதை எங்களுடைய தலைவர் வெளிப்படுத்தி வருகிறார். நேரம் வரும்போது அனைவரின் ஊழல் குறித்தும் அவர் பேசுவார். அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டுள்ள நடைபயணம் என்பது கட்சியினருக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்குமான நடைபயணம். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்கள் பலர் கலந்துகொள்கின்றனர். பல லட்சம் பேர் இதில் ரெஜிஸ்டர் செய்துள்ளனர். ஊழலை ஒழிப்பது தான் பிரதான நோக்கம்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எங்களுடைய விருப்பம். மது ஒழிப்பும் எங்களுடைய பிரதான நோக்கம். மதுவால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. நம்முடைய மாநிலம் குறித்துதான் முதலில் நாம் கவலைப்பட வேண்டும். அதன் பிறகுதான் மற்ற மாநிலங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். அண்ணாமலை அவர்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பதவியை விடக் கட்சிதான் அவருக்கு முக்கியம். அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார். கட்சி வெல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள்.
எஸ்.வி.சேகர் போன்றவர்கள் கட்சிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் பாதகமாக இல்லாமல் இருக்கலாம். அண்ணாமலை அவர்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் வரும் கூட்டம் எஸ்.வி.சேகருக்கு வருமா? குஷ்பு அவர்கள் தன்னுடைய பணியைத் தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகிறார். மணிப்பூர் பிரச்சனை என்பது இப்போது மட்டும் நடப்பது அல்ல. இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. பிரதமர் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமித்ஷா அங்கு சென்று வந்திருக்கிறார்.
சரியாக நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு அந்த வீடியோவை வெளியிட்டார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் தவறுகளை மட்டும்தான் இவர்கள் பேசுகிறார்கள். அனைத்து மாநிலங்களில் நடக்கும் தவறுகள் குறித்தும் பேச வேண்டும். முதலில் உங்களுடைய கட்சியில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். மணிப்பூரில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். பிபிசியில் வரும் எந்த செய்தியையும் நடுநிலையானதாக நான் பார்க்கவில்லை.