Skip to main content

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பு! 1045 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019
a

 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.  1045 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

 

*  இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல

 

* சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய ராம்லல்லா அமைப்பின் மனுவை ஏற்று தீர்ப்பு

 

* அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.  அந்த இடத்தைத்தான்  இஸ்லாமியர்கள் பாபர் மசூதி என்று அழைக்கிறார்கள்.

 

* சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர். 

 

 * அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 

 * ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே அயோத்தியில் ராமர், சீதை வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது

 

* தொல்லியல் துறையின் ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது

 

* காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. மசூதிக்கு கீழே இருந்த கட்டுமானம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல  

 

* சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்

 

* ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது

 

* 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு 

 

* பாபர் மசூதி இருந்த இடம் தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை

 

s

 

* ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது.  அங்கு  ராமர் கோவில் கட்டலாம்

 

* அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்

 

* சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்

 

*அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவு

 

*அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும்

 

* பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு

 

* அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும். இதற்காக, 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுவதை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் உறுதிசெய்ய வேண்டும்

 

 

Ayodhya