தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துக்கொண்டே வருகிறது. அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்குள்ளாகின்றன.
தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளுள் ஒன்றான திமுக தனது கூட்டணியை உறுதிபடுத்திவிட்டது. மற்றொரு கட்சியான அதிமுக தேமுதிகவிற்காக காத்திருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் உள்ளன. இந்தக்கூட்டணி இறுதிசெய்யப்பட்டு, தொகுதிகளும் பிரிக்கப்பட்டுவிட்டன.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தனியரசு, ஜான் பாண்டியன், ஜெகன்மூர்த்தி, சேதுராமன், பெஸ்ட் ராமசாமி, ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேமுதிகவின் முடிவிற்காக இந்தக் கூட்டணி காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்புக்கிடையே அமமுகவும் சத்தமே இல்லாமல் சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இருப்பது உறுதியாகியுள்ளது, அவர்களுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசிவருவதாகவும், அவர்களுக்கு ஒரு சில தொகுதிகளை ஒதுக்க இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மீதி இருக்கும் தொகுதிகளில் அமமுக போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.