Skip to main content

இறுதிச்சுற்று!

Published on 02/03/2018 | Edited on 03/03/2018
ஜெ. சிலையும் சச்சரவும்! அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர் ஆகியோரால் திறக்கப்பட்ட ஜெ. சிலை குறித்து நாலா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. சிலைகளால், ஆளும் கட்சியினருக்கும் போ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை திறப்பு!

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
j statue s


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினரால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இதேபோல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை இன்று திறக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த விழாவில், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது புரட்சி தலைவி அம்மா நாளிதழையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. மாவட்ட, கிளை அலுவலகங்கள், பிற மாநிலங்களில் உள்ள அ.தி.மு.க. அமைப்புகள் சார்பிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.