Skip to main content

படிப்பகம்!-

Published on 16/04/2018 | Edited on 22/04/2018
தி.மு.க.வும் தமிழும்! உலக மொழிகளிலேயே வளமையும் செழுமையும் இளமையும் இனிமையும் பழமையும் கொண்ட மொழி நமது தமிழ் மொழி. "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இத்தகைய பெருமைக்குரிய தமிழுக்கு, தமிழை வைத்து ஆட்சிக்கு வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தி.மு.க. செய்த சிறப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

“நீர்நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளச் சாத்திய கூறுகள் உள்ளதா?”- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

“Are there possible elements to carry out safety measures in water bodies?” - Order to file report

 

தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க  நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளச் சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க   கடற்கரைகள், அபாயகரமான குளங்கள் மற்றும் அருவிகள் உள்ளிட்ட  நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், 24 மணி நேரமும் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்புக் குழுவை பணியமர்த்த வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இது குறித்து பதில் அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கைகளை அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த நீதிபதிகள், இவற்றைச் செயல்படுத்தச் சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 22 ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

 

Next Story

“ஒரு அளவு இல்லாமல் அவர்கள் இஷ்டபடி கடன் வழங்கியுள்ளனர்” - அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

They have given loans as they please without a limit

 

திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “கூட்டுறவுத்துறையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், விதிமீறல்கள் ஆய்வு செய்யபட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்த அளவுக்கு அவர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. அதுபோல் தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யபடும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருகிறது. மேலும், முறைகேடுகள், விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை அரசு எடுக்கும்.

 

நகை இல்லாமல் கடன் வழங்கப்பட்டுள்ளது, சங்கங்களில் நகை இல்லை, கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கியுள்ளனர். மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளுக்கு 500 கணக்கான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. நிறைய விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது. இவையெல்லாம் சங்கங்களில், வங்கிகளில் ஆய்வு செய்யபட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது. பயிர்க்கடன் சம்மந்தமாக ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட பகுதிகளில்தான் இந்தக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றால், 80 ஆயிரம் வழங்கியுள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்குக் கூட ரூ. 3 இலட்சம்வரை கடன் கொடுத்துள்ளனர். தரிசு நிலங்களுக்கு கடன் வழங்கியுள்ளனர். ஒரு அளவு இல்லாமல் அவர்கள் இஷ்டபடி கடன் வழங்கியுள்ளனர். நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. குவாரி நிலங்களுக்கும் கூட கடந்த அதிமுக ஆட்சியில் கடன் வழங்கியுள்ளனர்” என்று கூறினார்.