சூரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருக்கும் என்.ஜி.கே படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலையே வெளியானது. இந்த படத்திற்காக வருடக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் மேல தாளங்களுடன் பட்டாசு வெடித்துப் படத்தைக் கொண்டாடினர். படம் பார்த்து வெளியே வந்த பலதரப்பு ரசிகர்களும் படத்தைப் பற்றி தெரிவித்தக் கருத்துக்களின் தொகுப்பு...

செல்வராகவன், சூர்யா காம்போ சூப்பரா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. சூர்யா நல்லா நடிச்சுருக்கார்.
செல்வராகவன் சூப்பரா இயக்கியிருக்கார். சாய் பல்லவி நல்லா நடிச்சுருக்காங்க.
செல்வராகவன்தான் படமே. அரசியலில் இறங்குறவுங்க தைரியமா இறங்கனும், அப்படிங்குறதுதான் கதையே. தைரியமா அரசியலுக்கு வாங்க.
புதுப்பேட்டைக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக்கும், செல்வராகவனுடைய மேஜிக் திரைக்கதையும் சரியா க்ளிக் ஆகியிருக்கு. படத்தோட பெரிய ப்ளஸ் வசனம்தான். க்ளைமேக்ஸில் ஒரு வசனம் வரும் சூப்பரா இருக்கும், ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்லியிருக்காங்க.
படத்தை இன்னும்கொஞ்சம் பார்க்க முடியாதான்னு யோசிச்சோம். டக்குன்னு முடிஞ்சுட்டு.
வழக்கமான செல்வராகவன் படம். நல்லாயிருக்கா இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு.
வேற லெவல் படம். க்ளைமேக்ஸுக்காக எத்தனை தடவை வேணும்னாலும் படம் பார்க்கலாம்.
படம் பக்கா, அமைச்சர் ஜெயக்குமாரைக் கிளிச்சிட்டாங்க.
இது சூரியா படம் இல்லை, செல்வராகவன் படம்தான். வித்தியாசமா சூப்பரா இருக்கு.
செல்வராகவன் திரைக்கதை சூப்பரா இருக்கு.
எதையோ சொல்ல வந்தாங்க, அதுக்குள்ள படம் முடிஞ்சுட்டு. இதுக்கு எல்.கே.ஜி படமே நல்லாயிருந்துச்சு. சர்கார், எல்.கே.ஜி எல்லாத்தையும் சேர்த்த மாதிரி இருக்கு.
நல்லாயிருக்கு. ஆனால், பழைய படத்தோட சாயல் அதிகமா இருக்கு.
யுவனின் பிஜிஎம் வேற லெவல், சூர்யா சில சீன்ல கண்ணாலயே மிரட்டியிருக்கார். சாய் பல்லவி நல்லா நடிச்சுருக்காங்க. அவங்களுக்கு நிறைய ஆக்டிங் ஸ்கோப் இருக்க படம்.
படம் இப்போ நடக்கிற எதார்த்தத்தை சொல்லியிருக்கு. இருந்தாலும் இது இளைஞர்களுக்கு முன் உதாரணமான்னு தெரியலை.
படத்தில் செல்வராகவன் இன்புட் கொஞ்சம் குறைவா இருக்கு. ஒரு தடவை பார்க்கலாம், செல்வராகவன் சூர்யா காம்போ முடியல...
ஃபுல்லி வேஸ்ட், 2 ஆம் பாதி போர் அடிச்சுது,
கரண்ட் அரசியலைத்தான் சொல்லியிருக்காங்க. படம் அவ்ளோவா நல்லா இல்லை. போர் அடிக்குற இடத்தில் பாட்டையும் சண்டையையும் வச்சு எடுத்திருக்காங்க.
முதல் பாதி ஒகே. ஆனால், 2 ஆம் பாதி மொக்கைதான். படம் வேஸ்ட். நிறைய எதிர்ப்பார்த்தோம். ஒன்னுமே இல்லை. நாங்க பேனர் வச்சதெல்லாம் வேஸ்ட்.
படம் நல்லாயிருக்கு, இருந்தாலும் 10 வருஷம் கழிச்சுதான் ஹிட் ஆகும்.