Skip to main content

அயோக்கியன்தான்... ஆனா முழுசா இல்ல! அயோக்யா - விமர்சனம்    

Published on 16/05/2019 | Edited on 16/05/2019
Ayogya

 

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்காக வந்துள்ளது 'அயோக்யா'. 

 

பணத்தாசை பிடித்து அயோக்கியத்தனம் செய்யும் போலீசாக வரும் விஷால், வில்லன் பார்த்திபன் செய்யும் அட்டூழியங்களுக்குத்  துணை போகிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனை எதிர்க்கும் நிலை ஏற்படுகிறது. கிரிமினலுக்கும், கிரிமினல் போலீசுக்கும் பிரச்சனை ஏற்பட கிரிமினல் போலீஸ் விஷால் திருந்துகிறாரா, அப்படி திருந்தினால் எதற்காகத் திருந்துகிறார் என்பதுதான் 'அயோக்யா'. \

 

mr local

 

முதல் பாதி வரை கெட்ட போலீஸ், இரண்டாம் பாதி நல்ல போலீஸ் என பழைய கிளிஷேவான போலீஸ் கதையில் நல்ல மெசேஜை  வைத்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் வெங்கட் மோகன். படத்தில் ஆங்காங்கே தென்படும் தேவையில்லாத பாடல்கள், ஆக்சன் காட்சிகள், பல இடங்களில் வரும் ஓவர் ஆக்டிங் ஆகியவற்றை தவிர்த்திருந்தால் இது இன்னும் ரசிக்கத்தக்க படமாக மாறியிருக்கும். இருந்தும் சற்று வேகமான திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தின் ஆணிவேராக இருந்து படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. தமிழுக்கென மாற்றப்பட்டுள்ள கிளைமாக்ஸ் படத்தின் பெரும் பலம். ரீமேக் படம் என்று வந்தாலும் தமிழுக்கென இன்னும் சில மாறுதல்களை செய்திருக்கலாம். பல இடங்களில் தெலுங்கு படங்கள் பார்க்கும் உணர்வு. 

 

v

 

விஷாலுக்குப் போலீஸ் பாத்திரம் எளிதானது. எளிதாகவே கையாண்டிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் பறக்கவிடுகிறார், வசனம் பேசி தெறிக்கவிடுகிறார். நடிப்பில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் வெளிப்படுகிறது. ராஷி கண்ணா அழகாக வந்து செல்கிறார். கே.எஸ் ரவிக்குமார், பார்த்திபன் இருவரும் படத்திற்கு ஜீவனாக இருந்து படத்தை தாங்கிப்  பிடித்துள்ளார்கள். கூடவே யோகிபாபு, ஆனந்த் ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி ஆகியோர் சப்போர்ட் செய்து சிறப்பாக நடித்துள்ளார். 

 

net

 

வி.ஐ கார்த்திக்கின் கேமாரா ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பு. சாம்.சி.எஸ் அளித்துள்ள பின்னணி இசை நன்று. உள்ளே வெளியே, சாமி, ஜில்லா, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்களை நினைவுபடுத்தினாலும் திரைக்கதை அவற்றிலிருந்து சற்றே வேறு பட்டு ரசிக்க வைத்திருப்பதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

 

அயோக்யா - முழு அயோக்கியத்தனம் இல்லை.

சார்ந்த செய்திகள்