Skip to main content

பிரபாஸுடன் கைகோர்த்த யுவன்... இணையத்தில் வைரலாகும் பாடல்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

yuvan sankar raja voice for prabhas's radhe shyam movie song

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 

ad

 

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘ராதே  ஷ்யாம்’ படத்தின் முதல் பாடலைப் படக்குழு நேற்று (15.11.2021) வெளியிட்டது. அதில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா, ஹரிணி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். 

 

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இப்பாடல், தற்போது யூடியூப் தளத்தில் 3.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்