Skip to main content

"கதை கேட்பதில்லை, கஷ்டத்தைக் கேட்டு தான் படம் பண்ணுவேன்" - யோகி பாபு

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

yogi babu speech at luckyman press meet

 

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, வீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லக்கி மேன்'. திங்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

 

இதில் கலந்து கொண்டு பேசிய யோகிபாபு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசினார். இதனிடையே "ஷூட்டிங்கிற்கு வராமல் இருக்கிறேன் என என்னை பற்றி நெகட்டிவாக பேசுவதாக சொன்னார்கள். ஷூட்டிங்கிற்கு வராமல் நான் எங்கே கொளுத்து வேலைக்கா போகிறேன். நீங்க கொடுக்கிற டேட்டில் நான் கரெக்ட்டா வந்துருவேன். ஆனால் ஈசியாக என்னை சொல்கிறார்கள். 

 

கவுண்டமணி சார் ஒரு படத்தில், வருங்கால சி.எம்... என சொல்லி அவரை நைட் ஃபுல்லா தூங்க விடமாட்டாங்க. பிறகு நான் சொல்லவில்லையப்பா என சொல்வார். அதே கதை தான் எனக்கு நடக்கிறது. நான் சொன்னால் நிறைய பேர் மாட்டிக்குவாங்க. நான் கேட்பது என்னவென்றால், 4 அல்லது 5 காட்சிகள் எடுத்துவைத்து விட்டு போஸ்டரில் பெரிசாக போட்டு ஏன் பிசினஸ் பண்ணுறீங்க. அதை பண்ண வேண்டாம் என் சொல்வது தான் இங்க பிரச்சனையா இருக்கு. 

 

இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் சொன்னார். இவரை போன்று நிறைய பேர் வருவாங்க. பொதுவாக நான் கதை கேட்டு படம் பண்ணுவது கிடையாது. கஷ்டத்தை கேட்டு தான் படம் பண்ணுவேன். அதில் நிறைய பேர் டைரக்டராக உருவாகியிருக்காங்க. இப்பவும் அப்படி தான் பண்ணுகிறேன். அதை எப்பவும் தொடர்வேன்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்