உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பலரைப் பாதித்து வருகிறது. இந்தத் தொற்றின் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை கூடுகிறது. வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கைகளை அடிக்கடி கழுவுங்கள், எப்படி நம்மை நாமே கவனித்துக்கொள்வது போன்ற விழிப்புணர்வுகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக், சுவாமி விவேகனந்தர் பிளேக் தொற்றின்போது மக்களுக்கு வெளியிட்ட அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
மேலும் அந்த பதிவில், “ 1898ல் கல்கத்தாவில் பிளேக் தொற்றுநோய் பரவி மக்கள் மரண பயத்தில் இருந்த போது நிவாரண பணியில் இருந்த சுவாமி விவேகானந்தர் எழுதி அச்சிட்டு வினியோகித்த அறிக்கை பாருங்கள். இன்றும் பொருந்துகிறது.! அதனால்தான் பல தலைவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். என்னுடைய ஹீரோவும் கூட!” என்று தெரிவித்துள்ளார்.