டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும், மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும் சினிமா மற்றும் விவசாய பிரச்சனையை குறித்து நடிகர் விவேக், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில்..."தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Published on 17/03/2018 | Edited on 19/03/2018