Published on 05/04/2019 | Edited on 05/04/2019

நடிகர் விவேக் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'வெள்ளை பூக்கள்'. இண்டஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் இளங்கோவன் இயக்கியுள்ள இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சார்லி மற்றும் பூஜா தேவாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தன் அடுத்த பட அறிவிப்பு குறித்து நடிகர் விவேக் ஒரு பேட்டியில் பேசியபோது.... "நான் விரைவில் ஒரு படம் இயக்க போகிறேன். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகைச்சுவை படமாக இது இருக்கும். முன்னணி கதாநாயகர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.