Skip to main content

விஸ்வாசத்தில் அஜித் அறிமுக பாடலின் வரி இதுவா...?

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
viswasam

 

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் படத்தில் அஜித்தின் அறிமுக பாடல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

 

 

 

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே நல்லவன்னு சொல்வாங்க, ஆலுமா டோலுமா, சர்வைவா, ஆகிய பாடல்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த நிலையில் இப்படத்தில் இடம்பெரும் பாடலுக்கு 'வேட்டிக்கட்டு' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அஜித் இருவேடங்களில் நடிக்கும் இப்படத்தில் வயதான அஜித் படம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையுடன் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்