![viswasam](http://image.nakkheeran.in/cdn/farfuture/QZ-HSqd64jfv-aCMVELzoc21M1ioWvN2SL6HsPgaRdo/1545930520/sites/default/files/inline-images/DvaL6XyUwAA_8Ee.jpg)
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக அறிவித்தது. இந்த நிலையில் ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை 'விஸ்வாசம்' படத்திற்கு கிடைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் இப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸ் சார்பில் பிரசாந்த் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும் இந்த இரு நாடுகளிலும் ரிலீசாகும் முதல் அஜித் படமாக 'விஸ்வாசம்' படம் அமைந்துள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் ரஜினியின் 2.0 படத்தை ரஷ்யாவில் ரிலீஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'விஸ்வாசம்' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.