Skip to main content

விஜய் பட தயாரிப்பாளருடன் இணைந்த அஜித் பட இயக்குநர்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Vishnuvaradhan teamed up with master film producer

பட்டியல், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியில் 'ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தின் மூலம் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு தேசிய விருது கிடைத்தது. 

இதற்கிடையில், தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தை தயாரித்த XB  பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நேசிப்பாயா’ என தலைப்பு வைத்துள்ளனர். இது குறித்து XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், டைட்டில் ரிவிலீங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், விதியால் சவால் செய்யப்பட காதல் பயணம் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
trisha bollywood movie update

பட்டியல், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் 'ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  

இப்படத்தை முடித்து மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளார். அங்கு முன்னணி நடிகரான சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் முன்பு தகவல் வெளியானது. அதோடு ஆக்‌ஷன் ஜானரில் இப்படம் பெரிய பொருட் செலவில் உருவாவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் த்ரிஷா இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னால் 2010 ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடித்த கட்டா மேத்தா படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவரின் முதல் மற்றும் கடைசி படமாக இதுவரை இருந்து வருகிறது.

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடென்டிட்டி படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' படத்தை கைவசம் வைத்துள்ளார்.

Next Story

சல்மான் கான் - விஷ்ணுவர்தன் படத்தின் லேட்டஸ்ட் தகவல்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

vishnu vardhan salman khan update

 

பட்டியல், பில்லா, ஆரம்பம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் 'ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் மூலம் இந்தியில் கால் பதித்த அவர், அதன் பிறகு எந்த படமும் இயக்கவில்லை. ஆனால், மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், சல்மான் கான் அதில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் கரண் ஜோகர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. 

 

இந்த தகவல் பல மாதங்களாக உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அது உறுதியாகிவிட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.  இது சல்மான் கானின் அடுத்த படமாக இருக்கும் எனவும், வருகிற நவம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் மொத்தம் 8 மாதங்கள் எனப் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், விரைவில் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு ஆக்ஷன் ஜானரில் இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகுவதாகவும் பேசப்படுகிறது. 

 

விஷ்ணுவர்தன், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.